தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

!!!!!!!!!!!!!!Thanikai Puranam!!!!!!!!!!!!!!

போற்றத்தகுந்த செயலாகும். நுண்மாண் நுழைபுலம்மிக்க இப்பேரறிஞர்களின் செயலால் நம் தமிழன்னையும், தமிழ்நாடும் பெரும் பயனுறுவது திண்ணம்.
தணிகைப்புராணத்தை அதன் பெருமைக்கு ஏற்ற உரையுடன் பதிப்பித்து நல்கும் பேறு எங்கள் கழகத்திற்கு வாய்த்தது குறித்துப் பெருமிதமும் பெருமகிழ்வும் அடைந்துள்ளோம்.
கற்பவர்களின் நலனைக் கருதியும், திருத்தணிகையைக் குறித்து இம்முனிவரர் பாடியருளிய நூல்கள் மூன்றும் சேர்ந்து ஒரே தொகுதியாக இருப்பதுவே பொருத்தமாகும் என்பது கருதியும் திருத்தணிகைப் பதிற்றுப்பத்து அந்தாதி, திருத் தணிகை ஆற்றுப்படை என்னும் இருநூல்களையும் இந்நூலின் பின்னர் இணைத்துள்ளோம்.
திருத்தணிகைப் பதிற்றுப்பத்து அந்தாதிக்கு எங்கள் கழகப் புலவர் திரு. ஆ. பொன்னுசாமிப்பிள்ளையவர்கள் குறிப்புரை எழுதியுதவியுள்ளார்கள். அதற்கு இதுவரையிலும் யாரும் உரை எழுதவில்லை.
திருத்தணிகை யாற்றுப்படைக்குப் புரசை அட்டாவதானம் சபாபதி முதலியாரவர்கள் எழுதியருளிய விரிவுரை சாலச்சிறந்ததாக இருந்தமையால் அவ்வுரையுடன் அதனைப் பதிப்பிக்கலானோம்.
பேராசிரியர் திரு கந்தசாமியாருட்பட எல்லா உரையாசிரியர்களுக்கும் நாங்கள் எழுமையும் நன்றி பாராட்டக் கடமைப் பட்டுள்ளோம்.
இந்நூல் வெளியீட்டுச் செலவுத் தொகையில் ஒருபகுதி மத்திய அரசின் அறிவியலாராய்ச்சி பண்பாடு செய்தித் துறை அமைச்சரால் நன்கொடையாக வழங்கப் பெற்றிருக்கிற தென்பதை நன்றியறிதலுடன் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
நம் செந்தமிழன்னைக்குப் பெருமைமிக்க அணிகலன்களாக விளங்கும் இந்நூல்களையும் தமிழகம் ஏற்றுக்கொண்டு மேலும் இத்தகைய திருப்பணியில் எங்களை ஊக்கத்தோடு ஈடுபடும்படி செய்யும் என நம்புகின்றோம்.
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 02:16:15(இந்திய நேரம்)