தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Thanikai Puranam

நின்றது என்பது வெளிப்படை. அதுவேயுமன்றி இச் செய்யுளை முனிவர் பாடிய பொழுது மற்றுமொரு புலவருடைய செய்யுளும் அவர் மனத்தின் ஆழத்திலிருந்து மேலெழுந்து வந்து அவர்க்குக் கைகொடுத்து நிற்கின்றது. அப் புலவர் யார்? அவர் தாம் உலகப் பெரும் புலவருள் ஒருவராய்த் திகழ்கின்ற கவிச் சக்கரவர்த்தி கம்பநாடர். என்னே! இஃதென்னே! கம்பநாடர்க்கும் இச் செய்யுட்கும் தொடர்பொன்றும் இல்லையே! என்று ஐயுறு கின்றீர்களா? இதோ வருவது கம்பநாடர் செய்யுள் :

"என்புகழ் கின்ற தேழை யெயினனே னிரவி யென்பான்
 தன்புகழ்க் கற்றை மற்றை யொளிகளைத் தவிர்க்கு மாபோல்
 மன்புகழ் பெருமை நுங்கண் மரபினோர் புகழ்க ளெல்லாம்
 உன்புக ழாக்கிக் கொண்டா யுயர்குணத் துரவுத் தோளாய்"

எனவரும் இதன்கண்ணமைந்த உவமையின் அழகில் ஈடுபட்டுக் கச்சியப்பர் எத்துணையும் பன்முறை இன்புற்றிருத்தல் வேண்டும். இருந்தவாற்றால், அந்த அழகிய உவமை இவருடைய பொருளே யாகி, "தொண்டை நாடு சான்றவருடைத் தென்றோதுந் தகு மொழிக் கதிரான் மற்றை ஏன்றசீர் நாட்டின் சீர்த்தி யென்னும் மீனொளி மையாப்ப ஆன்ற செம் பருதியாய தனைய தண்டக நாடு" என்று மிக அருமையாக உருக்கொண்டமைகின்றது. அங்ஙனமே கச்சியப்ப முனிவர் தமக்கு முன்னிருந்த மாபெரும் புலவர் நலனெல்லாம் தம்முடைய நலமாக்கிக்கொண்டனர். இவ்வுண்மையை இத்தணிகைப் புராணத்தில் எங்கெங்குங் காண்டல் கூடும்.

இனி, ஒரு புலவரின் சிறப்பினை உள்ளவாறே எடுத்தோத அறியாதார் சிலர் மற்றொரு புலவரைக் காட்டி இவரினும் இப்புலவர் சாலப் பெரியர் கண்டீர்! என்று கூறுவர். ஒவ்வொரு பெரும் புலவனும் தன்றனக் கென அமைந்த தனிச்சிறப்பு ஒவ்வொன்றுடையனாகவே இருப்பான். அச்சிறப்பு அவனுக்கு முன்னும் ஏன்? பின்னுங்கூட மற்றொரு புலவனுக்கும் வாய்ப்பதில்லை. திருவள்ளுவர்க்கென்று ஒரு தனிச் சிறப்புண்டு. அச் சிறப்பு அவருக்குமுன் வேறெந்தப் புலவனுக்கும் இருந்ததில்லை. மற்று அவருக்குப்பின் இதுகாறும் வேறெந்தப் புலவனுக்கும் அது வாய்த்ததுமில்லை. இனி எதிர்காலத்தும் அதனை எந்தப் புலவனும் பெறப் போவது மில்லை. இங்ஙனம் இருத்தலால் திருவள்ளுவருக்கு நிகர் திருவள்ளுவரேயாவர். கம்பனுக்கு நிகர் அவனேயன்றிப் பிறர் யாருமில்லை. இத்தணிகைப் புராணத்தை இயற்றியருளிய கச்சியப்ப முனிவருக்கும் இது பொருந்தும் ஆதலால், மாபெரும் புலவராகிய கச்சியப்ப முனிவர் தமக்குரிய தனிச்சிறப்பு எப்பொழுதும் தம்மிற்றணவாது நிற்பவே தமக்கு முற்பட்ட கம்பனுடைய அத் தனிச்சிறப்பையும்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-09-2017 13:18:12(இந்திய நேரம்)