தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தம


  • தமிழர் வளர்த்த அழகு கலைகள் 

    ஆராய்ச்சிப் பேரறிஞருக்கு
    பாவேந்தர் பாரதிதாசன் வாழ்த்து
    மயிலை. சீனி வேங்கடசாமி

    தாங்கெட நேர்ந்த போதும்
    தமிழ்க்கெட லாற்றா அண்ணல்
    வேங்கட சாமி என்பேன்
    விரிபெரு தமிழர் மேன்மை
    ஓங்கிடச் செய்வ தொன்றே
    உயிர்ப்பணியாகக் கொண்டோன்
    வீங்கிட மாட்டான் கல்வி
    விளம்பரம் விழைதல் இல்லான்.
    தமிழுக்குத் தொண்டு செய்வோர்
    தலைச்சங்க முதலாய் இன்றும்
    தமிழுக்குத் தொண்டர் யார்க்கும்
    தலைத்தொண்டன்; அடிமை அல்லன்;
    குமிழ்பகுத் தறிவியக்கம்
    கொள்கையில் அசைக் கொணாத
    இமயமும் தோற்கும் அண்ணல்
    ஈடிலாத் திறமை ஆற்றல்!
    ஒன்றினும் திரியாதுள்ளம்
    ஒண்டமிழ்க் குழைப்பதொன்றே
    நன்றினும் நன்று என்று
    துறவினை நயந்த மேலோன்.
    நன்றிகெட் டதிகாரத்தை
    நாடும் எவ்வரசும் அன்னார்
    குன்றினும் மிகுந்த சீர்த்தி
    கொண்டுயர் வளித்தார் இல்லை.
     

     

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 04:45:37(இந்திய நேரம்)