தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).


நாட்டுப் பாடல், ஒரு நிகழ்ச்சியின் மீது நாட்டு மக்களின் பிரதிபலிப்பை வெளியிடுவது. சிவகாசிக் கலகத்தைப்பற்றிய பாடல்களில், ஒன்று கலகத்தில் சம்பந்தப்பட்ட ஒரு கட்சிக்குச் சாதகமானது. மற்றொன்று பொதுவாகக் கலகத்கினால் எவ்வளவு துன்பம் மக்களுக்கு ஏற்படுகிறது என்பதைக் கூறி கலகத்தைத் தடுக்க முயலுவது. இவ்விரண்டுமே யாரோ ஒருவரால் எழுதப்பட்டவைதான். இவை பரவுகின்றன. பாட்டை ஏற்றுக் கொள்ளுகிறவர்கள் அந்த உணர்ச்சியோடு ஒன்றுபடுகிறார்கள். ஒரு சாதிக்காரர்கள் செய்தது நியாயம் என்றோ, அநியாயம் என்றோ, இரு கட்சியாரும் கலகம் செய்தது, எவ்வளவு துன்பகரமானதென்றோ, ஒரு படிப்பினை பாடலில் இருக்கும். இந்தப் பாடலின் ஒவ்வொரு வரியையும் ஒவ்வொருவர் எழுதவில்லை. ஒருவரே பாடல் முழுவதையும் எழுதினார்.

ஏற்றுக்கொள்ளப்பட்ட பாடல், நாட்டார் பண்பாட்டு மதிப்புகளுக்கு ஒத்திருக்கிறது. எனவே பரவுகிறது. எனவே “நாட்டுப் பாடலின் பொதுத் தன்மை, அதன் சிருஷ்டியில் இல்லை, பரவுதலில் தான் இருக்கிறது” என்று Folk Song in England என்ற நூலில் ஆசிரியர் கூறுகிறார்.

இதனைக் குறித்து அறியாமையால் ஒரு ஆய்வாளர் குழம்பிப் போய், அக்குழப்பமே தெளிவான கருத்தென்று எழுதுகிறார். ஒரு பாடலைக் குறிப்பிட்டு இதை நாட்டுப் பாடகரான S.M. கார்க்கியே எழுதியிருக்கலாம். இது அசல் நாட்டுப் பாடல் அல்ல என்று கூறுகிறார். ஒரு நாட்டுப் பாடலை, முன்பிருந்திராத புதிய செய்தியை வைத்து கார்க்கி எழுதலாம். ஆனால் அதை நாட்டு மக்கள் (Folk) ஏற்றுக்கொள்வதைப் பொறுத்து அது நாட்டுப் பாடலாகும். மேற்கூறிய பாட்டு சிவகிரியில் பாடப் படுகிறது. பக்கத்து ஊர்களில் அவரே பாடிப் பரப்புகிறார். பரவுதல்தான் Folk Song ஆ இல்லையா என்பதைக் காட்டும். சினிமா பாட்டு, நாட்டு மெட்டு, நாட்டார் மதிப்புகள், அவர்களது பேச்சு வழக்கு இருந்தால் பரவும். இது சிருஷ்டியில், சினிமாப் பாடகருடையது. பரவுதலில் அது ஏற்றுக்கொள்ளப்படுகிறது (adopted) , அசல் நாட்டுப் பாடல், நாட்டாரின் பண்பாட்டு மதிப்புகளுக்கேற்ப எழுதி, அது பரவுமானால் நாட்டுப் பாடலாகும். இதுவல்லாமல், வாய்மொழிப் பாடல், எழுதப்படாத பாடல், தூய நாட்டார் பாடல் என்பதெல்லாம், நாட்டுப் பாடலின் சிருஷ்டியையும், பரவுதலையும் பற்றிய அறியாமையால் எழுந்தது. இவை நாட்டுப் பாடலை கற்சிலையாக எண்ணுகிற போக்கு. நாட்டுப் பாடல்




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 04:49:42(இந்திய நேரம்)