Primary tabs
கற்புக் குறை சிறிதும் காசினியில் நேராது
கற்பே பெரு நெருப்பாம் கற்பே பெரும் புகழாம்பெண்களிது செய்தார் பேருலகம் தன்னை வாழ்த்த
புருஷர் பழிதுடைக்க பூவையர்கள் செய்தார்கள்
கற்புடை நமது பெண்கள் பொற்புடனே செய்தஇது
போது மிவனை இன்னும் என்ன செய்யப் போகின்றீர்”
என்று தருமர் கேட்கிறார்.
இவை அனைத்திலும், அல்லி ஏற்றம் பெறுகின்றாள். அல்லியைப் பற்றிய கதைகள், செவி வழியாகப் பல வழங்கியிருக்க வேண்டும். அவற்றிலிருந்து சிலவற்றைத் தொகுத்துப் பிற்காலப் பாடகர்கள், நாட்டுப் பாடல்களாக எழுதி வைத்திருக்க வேண்டும். இக் கதைகளில் மகாபாரத கதாபாத்திரங்கள் இடம் பெறுகின்றன என்றாலும், கதையின் கருத்துக்கள் பழம் தமிழ் நாட்டில் நிலவியவைதாம்.
இவற்றைப் போன்ற பாரதத்தோடு தொடர்புடைய கதைகள் சில நாட்டுப்பாடல் வடிவத்தில் வழங்கி வருகின்றன. அவை இக் கதாபாத்திரங்களின் தன்மைகளில் எவற்றை மக்கள் விரும்புகின்றார்கள், எவற்றை வெறுக்கின்றார்கள் என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. புராணக் கதா பாத்திரங்களைவிட தமிழ்நாட்டுக் கற்பனைக் கதாபாத்திரங்களுக்கே இப்பாடல்களில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த நான்கு கதைப் பாடல்களிலும், அல்லி ஒரு முக்கிய கதாபாத்திரமாகத் திகழ்கிறாள். புராணக் கதாபாத்திரங்களும் கதையில் உரிய இடம் பெறுகின்றனர். ஆனால் புராணக் கதாபாத்திரங்கள் தமிழ் நாட்டுப் பண்பாட்டுக்கு ஏற்றபடி தன்மை மாறி உருவாக்கப் பட்டுள்ளன.
சமூகக் கதைப் பாடல்கள் இன்னும் தமிழ் மக்களிடையே வழங்கி வருகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை முத்துப்பட்டன் வில்லுப்பாட்டு, சின்னத்தம்பி வில்லுப் பாட்டு, சின்ன நாடான் கதை, வெங்கல ராஜன் கதை, கள்ளழகர் கதை, நல்ல தங்காள் கதை, கௌதல மாடன் கதை முதலியவை. இவை யாவும், தமிழ் நாட்டு் உழைப்பாளி மக்களையும், தமிழ் நாட்டுத் தலைவர்களையும் கதைத் தலைவர்களாகக் கொண்டது. இக்கதைகளை விரிவாகக் கூறுவதற்கு இம் முகவுரையில் இடமில்லை.ஆயினும் கதைகளின் கருப்பொருளை மட்டும் சுருக்கமாகக் கூறுவோம்.
முத்துப்பட்டன் பிராமணன் பொம்மக்கா, திம்மக்கா என்ற இரு சக்கிலியப் பெண்களை மணந்து கொள்வதற்காக குலஉயர்வையும்,