Primary tabs
பஞ்சம்
தேளாச் சுருண்டழுதோம்
ஊரையடுத்த புளியமரத்தடியில் இளைஞர்கள், பந்தாடி, மகிழ்ச்சியாக நேரம் போக்குவார்கள். பஞ்சத்தால் உடல் நலிந்த இளைஞர்கள் எழுந்து நடக்கவும் சக்தியின்றி மெலிந்திருக்கிறார்கள். அவர்கள் உள்ளத்தில் மகிழ்ச்சியில்லை. அவர்களது வேதனையை “பாம்பாச் சுருண்டழுதோம், தேளாச் சுருண்டழுதோம்” என இரண்டு உவமைகளின் மூலம் விளக்குகிறார்கள்.
பந்தாடும் வி்ல்ல மரம்
பந்தாடும் நேர மெல்லாம்
பகவானை பார்த் தெழுதோம்.
பாம்புக்கோ ரெண்டு கண்ணு
பகவான் கொடுத்த கண்ணு
பாவிப் பய சீமையிலே
பாம்பா சுருண்ட ழுதோம்.
தேளுக்கோ ரெண்டு கண்ணு
தெய்வம் கொடுத்த கண்ணு
பாவிப்பய தேசத்திலே
தேளாச் சுருண்டழுதோம்.
சேகரித்தவர்
:
எம்.பி.எம்.
ராஜவேலு
இடம்
:
மீளவிட்டான், தூத்துக்குடி,
திருநெல்வேலி மாவட்டம்.