Primary tabs
சீட்டெழுதி விட்டாளாம்
சிறு மணலுக் கொழிக் கையிலே-உன்
சின்ன அத்தைக் கண்டாளாம்-உனக்குச்
சீட்டெழுதி விட்டாளாம்!
பெரி யாத்தங் கரையோரம்-எஞ் சுப்பையா நீ
பெரு மணலுக் கொழிக் கையிலே-உன்
பெரிய அத்தைக் கண்டாளாம்-உனக்குப்
பேரெழுதி விட்டாளாம்
பனை பிடிங்கிப் பல் விளக்கி-நீ
பயிர் போல நாமமிட்டால்
நாமத்தின் அழகுகண்டு
நச்சுவாளாம் அத்தை மகன்.
குறிப்பு: பல் விளக்கும் குச்சி பனைமரம்-உயர்வு நவிற்சி.
உதவியவர்:
புலவர் இராம ராசன்
சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி
இடம்:
வேலூர்,
சேலம் மாவட்டம்.