தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).



விளையாட்டு
ஐயன் கொம்பு

தரையில் உட்கார்ந்து கால் பெருவிரலைக் கையினால் பிடித்துக் கொண்டு ஒருவன் கேள்வி கேட்பான். மற்றவர்கள் பதில் சொல்லுவார்கள். இப்பாடலுக்குப் பொருள் எதுவும் இல்லை.

 
கே : இதாரு கொம்பு?
ப   :ஐயன் கொம்பு
கே : ஐயன் எங்கே?
ப   :பூப்பறிக்கப் போயிட்டான்
கே :பூவெங்கே?
ப   :தண்ணியிலே கிடக்கு
கே : தண்ணி எங்கே?
ப   : ஆடு மாடு குடிச்சிடுச்சு
கே :ஆடு மாடு எங்கே?
ப   :கள்ளன் கொண்டு போயிட்டான்
கே :கள்ளன் எங்கே?
ப   :மரத்தில் இருக்கான்
கே :வெட்டவா குத்தவா,
      வென்னித்தண்ணி ஊத்தவா?

குறிப்பு: குழந்தைகளுக்கு கேள்விகளுக்கு சட், சட்டென்று பதிலளிக்கும் பழக்கத்தை இவ்விளையாட்டு உண்டாக்கும். திடீரென்று கேள்வியும் பதிலும் புதிது, புதிதாகத் தோன்றலாம்.

சேகரித்தவர்:
S.S. போத்தையா

இடம்:
விளாத்க்திகுளம் வட்டம்
திருநெல்வேலி மாவட்டம்.




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 05:06:07(இந்திய நேரம்)