Primary tabs
கூப்பிட்டது கேட்கலியா?
அவள் குளித்து விட்டு சோலையில் மயிர் உலர்த்திக் கொண்டிருந்தாள்; அப்பொழுது அவள் காதலன் கோபுரத்தின் மேலேறிக் கூப்பிடுகிறான். அதற்கு அவள் பேசவில்லை. பிறகு அவள் அருகில் சென்று தான் கூப்பிட்டதற்கு ஏன் பேசவில்லை எனக் கேட்கிறான், அதற்கு அவள் நீங்களா கூப்பிட்டீர்கள். அந்தச் சத்தம் குயில் சத்தம் என்றல்லவா இருந்தேன் என்று சொல்லுகிறாள்,
(குறிப்புரை-T. மங்கை)
மயிருணத்தும் குள்ளப் பெண்ணே
கோபுரத்து மேலேறி
கூப்பிட்ட சச்சம் கேக்கலியா?
குயிலுன்னு நானிருந்தேன்
ஆளுச் சச்ச மின்னிருந்தா
அச்சணமே வந்திருப்பே
வட்டார
வழக்கு:
சச்சம்-சத்தம்;
அச்சணமே-அக்கணமே.
சேகரித்தவர்:
சந்திரன்
இடம்:
வாழப்பாடி,
சேலம் மாவட்டம்.