Primary tabs
சட்டம் பொருந்தவில்லை
முறை மாப்பிள்ளை, முறைப்பெண்னை சற்று வரம்புமீறியே கேலி பேசிக்கொள்ள உரிமை இருந்து வந்தது. இதற்குக் காரணம் முன்னர் ஒரு குறிப்பில் கூறியுள்ளோம்.
ஒரு முறை மாப்பிள்ளை வயதில் இளையவன் உருவத்திலும் பெண்ணைப் பார்க்கிலும் சிறியவன். அவன் விளையாட்டாக அவளிடம் காதல் குறிப்புணர்த்தும் பாடல்கள் பாடுகிறான். அவளும் “மீசை முளைக்காதவன் என் உயரத்தை மீறாதவன். என்னைவிடச் சிறுவன் நீ எனக்கு மட்டமா? ”
ஜோடிப் புறா மேயயிலே
ஆளக் கண்டா சச்சம் போடும்
அழகான மாடப்புறா
கம்மாக் குள்ள வேப்பமரம்
தலையிலே தண்ணிக் குடம்- நீ
தனிச்சு வந்தா லாகாதோ
ஆளுக் கொஞ்சம் மீறலியே
சட்டம் பொருந்தலையே-நம்ம
சரியான மட்டத் தோட
வட்டார வழக்கு: சச்சம் -சப்தம்.
சேகரித்தவர்:
S.M.
கார்க்கி
இடம்;
நெல்லை மாவட்டம்.