தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


பெண்குடம் போனால் !

அவன் என்ன கேட்கிறான், அவள் என்ன பதில் சொல்கிறாள் என்று நீங்களே தெரிந்து கொள்ளுங்கள். தமிழ் மகளின் பண்பாட்டுப் பெருமையை காதல் விளையாட்டில் கூட அவள் நிலைநாட்டுகிறாள்.

ஆண்:
மண் குடம் கொண்டு
மலையோரம் போற புள்ள !
மண் குடம் வச்சுப் போட்டு-உன்
பெண் குடம் ரெண்டும் விலை சொல்லடி
பெண்:
மண் குடம் போனால்
மறு குடம் வாங்கலாம்
பெண் குடம் போனால்
உலகம் பொருந்துமா மன்னவரே?
 

 

சேகரித்தவர்:
S.M. கார்க்கி

இடம்:
சிவகிரி,
நெல்லை மாவட்டம்.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 05:17:57(இந்திய நேரம்)