Primary tabs
ஏன் வந்தாய்?
பெற்றோரின் எதிர்ப்பை மீறி ஓடிவந்து மணம், செய்து கொண்ட அவர்கள், ஒரு நாள் இருவரும் பழைய நினைவுகளைப் பரிமாறிக் கொள்ளுகின்றனர். இருவரும் உழைத்து மனநிறைவோடு வாழ்கின்றனர். ஒருவருக்கொருவர் ஆதரவாகப் பேசிக் கொள்ளுவதைக் காணும்போது நமக்கு அவர்கள் கருத்தொருமித்து வாழும் தம்பதிகள் என்பது தெரிகிறது.
ஆவரைப் பூவழகு
மஞ்சு முழியழகு
மயங்கினனே உன்னாலே
மூடு வச்ச முன்னாலே
தவலை சோறு பொங்க
தவம் பெற்றது யாராலே?
குணத்துக்கோ வழி நடந்து-உங்க
அமிர்த குணத்துக்கில்ல-நான்
அங்கிருந்து இங்க வந்தேன்
பாலூத்திச் சோறு கட்டி
கிட்டருக்கும கட்டுச் சோத்த
தின்போம் வாடி பெண் மயிலே
சேகரித்தவர்
:
S.M. கார்க்கி
இடம்
:
சிவகிரி,
நெல்லை மாவட்டம்.