Primary tabs
இந்நில மெல்லாம் விளங்க
இன்பமாய் வாழ்ந்திருங்கள்
ஆயுசு தீர்க்கமுடன்
அம்மனுட தன்னருளால்
நாயகனும், நாயகியும்
நலமாக வாழ்ந்திருங்கள்
தலைப்பிள்ளை ஆண் பெறுவீர்
தகப்பனார் பெயரிடுவீர்
மறுபிள்ளை பெண் பெறுவீர்
மாதா பெயரிடுவீர்
பிள்ளை பதினாறும் பெற்று
பெரு வாழ்வு வாழ்ந்திருங்கள்
மக்கள் பதினாறும் பெற்று
மங்கலமாய் வாழ்ந்திருங்கள்
ஆல்போல் தழைத்து
அருகு போல் வேரூன்றி
நலமுடனே எந்நாளும்
ஞானமுடன் வாழ்ந்திடுவீர்
போடுங்கள் பெண்கள்
பொன்னார் மணிக்குலவை
இன்னு மொரு குலவை
இரு வாயும் பொன் சொரிய
குறிப்பு : ‘பதினாறும் பெற்று’ என்ற சொற்றொடருக்கு புதிய பொருள் கூறப்படுகிறது. ‘பதினாறு செல்வங்கள்’ என்று பொருள் கூறி, பதினாறு செல்வங்களின் பட்டியலும் கூறப்படுகிறது. நாட்டார் நம்பிக்கையில் 16 என்பது மக்களைத்தான் குறிப்பிடும். பிள்ளைப்பதினாறு, மக்கள் பதினாறு என்ற சொற்றொடர்கள் இதனைத் தொடர்பாக்கும்.
சேகரித்தவர்
:
S.S. போத்தையா
இடம்
:
சிவகிரி,
நெல்லை மாவட்டம்.