Primary tabs
ரயில் வண்டி
ரயில் வண்டியை புகைவண்டி என்று கூறுவது தனித் தமிழார்வத்தில் ஏற்பட்ட புதிய கண்டுபிடிப்பல்ல. அதைக் கண்ட உடனேயே ஜனங்கள் புகைவண்டி என்றே கூறினர் என்பதைப் பாடலில் காணலாம்.
ஒராம்
சந்தன மரம்
கட்டை
வெட்டி
ஒரு ரூவா வெள்ளி
சொப்பி
லிட்டு
காதத்துலே
வண்டி காணுதுபார்
கைதாத்தி
மரமல்லாம் சாயுதுபார்
சுத்திச் சுளஞ்சி வரும்
பொகைவண்டி
சூரமங்கலம்
ஸ்டேஷன்லே நிக்கும் வண்டி
அலைஞ்சி கொலைஞ்சி வரும்
பொகைவண்டி
அல்லா
ஸ்டேஷனுல நிக்கும் வண்டி
வட்டார வழக்கு: சொப்பு-மரத்தால் செய்த மூடியுள்ள சிறு பாத்திரம் ; அல்லா-எல்லா ; கொலைஞ்சி-குலைஞ்சுது ; சுளஞ்சி-சுழன்று.
சேகரித்தவர்
:
கவிஞர் சடையப்பன்
இடம்
:
அரூர்,தருமபுரி மாவட்டம்.