தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Thogaigal


அடிப்படை. குளம், ஏரி, ஆறுகளில் நீந்திய பிறகே கடலில் நீந்த முடியும்.
மலையில் ஏற ஆசைப்படுவோர், முதலில் மரத்தில் ஏறவாவது தெரிந்திருக்க
வேண்டாமா? சுவர் இல்லாமல் சித்திரமா? ஆனால் அந்த விளக்கங்களை
எழுத இங்கே முற்படவில்லை; அப்படி எழுத முயன்றால் முழு இலக்கண
நூலாகப் பெருகும். அவற்றிற்கான விளக்கங்களைப் பிற இலக்கண
நூல்களில்தாம் கற்றாக வேண்டும். தமிழ் இலக்கணப் பயிற்சி இல்லார்க்கு
எடுத்த எடுப்பில் இந்நூல் பயன் தராது. இந்நூல் இளங்கலை, முதுகலைத் தமிழ்
பயிலும் மாணவர்கள், ஆய்வாளர்கள், இதழாசிரியர்கள், தமிழ்ப்
படைப்பாளிகள், இயற்றமிழ் இலக்கணத்தை ஓரளவு முன்பே பயின்றிருப்போர்
முதலானோர்க்கு மிகவும் பயன்படும்.

    

ஒற்றெழுத்தை மிகுத்து எழுதுவது தேவையா எனும் கட்சியினர் உண்டு.
அவர்களுக்கு அறிவுபூர்வமாகப் பதில் சொல்லியாக வேண்டும். மிகுத்து
எழுதுவதாலும் மிகுக்காமல் எழுதுவதாலும் பொருள் வேறுபாட்டைக் காண
முடிகின்றது. பொருளை வேறுபடுத்த க், ச், த், ப் ஆகியன பயனாகின்றன.
எனவே, இவற்றின் பயன்பாட்டுத் தேவையை உணரலாம். ‘ஆடுநர் புகழ்ந்தார்’
என மிகுக்காமல் எழுதினால், ஆடுநர் பிறரைப் புகழ்ந்தார்
என்று பொருள்; ஆடுநர்ப் புகழ்ந்தார் என மிகுத்தால் ஆடுநரைப் பிறர்
புகழ்ந்தார் என்று பொருள். இங்கே செய்வினை / செயப்பாட்டு வினையின்
வேறுபாட்டை ‘ப்’உண்டாக்குகின்றது.

தந்த கட்டில் (கொடுத்த கட்டில்)
தந்தக் கட்டில் (தந்தத்தினால் செய்யப்பட்ட கட்டில்)
பட்ட படிப்பு (பட்டுப்போன படிப்பு)
பட்டப் படிப்பு (பட்டத்திற்கு உரிய படிப்பு)


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 03-09-2016 21:44:01(இந்திய நேரம்)