தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tvu-அணிந்துரை



VI

அணிந்துரை

கி.பி. 1578 இல்    தமிழ் மொழியில்  முதலில் அச்சிடப் பெற்ற
சிறுவெளியீடு  வெளியிடப்பட்டது.தமிழ் நாட்டில்    கிறிஸ்தவ சமயப்
பரப்புதல் செய்ய வந்த பாதிரிமார்களால்தான் முன்  முயற்சியாக இது
வெளிக்கொணரப்பட்டது.அடுத்து        கி.பி. 19ஆம் நூற்றாண்டின்
முற்பகுதியில்தான்       தமிழ்   இதழ்கள் மேற்படி  குருமார்களால்
தொடங்கப்பட்டன.சமயப் பிரச்சாரமும்,        சமூக விழிப்புணர்வும்,
அரசியல் ஆர்வமும் தமிழ் இதழ்களில் தத்தம் கருத்தை வெளிப்படுத்த
சமயத்      தொண்டர்களுக்கும்      சமூகப்     பெருமக்களுக்கும்,
அரசியல் விழிப்புணர்வு  பெற்றவர்களுக்கும் பெரிதும் துணை புரிந்தன.

நமக்குத்      தெரிந்தவரையில்              தமிழ் பெரியார்
திரு.வி.கல்யாணசுந்தரனாரால்      தோற்றுவிக்கப்பட்ட “தேசபக்தன்”
எனும் தமிழ்நாளிதழில் அவரால் எழுதப்பட்ட        தலையங்கங்கள்
அல்லது ஆசிரியர்க் கட்டுரைகள்   1918 இல் தொகுக்கப்பட்டு, “தேச
பக்தாமிர்தம்” என்ற தலைப்பிட்டு     வெளியிடப்பட்டுள்ளது.இதற்குப்
பின்னர் கவிஞர் கா.மு. செரீப்பால் நடத்தப்  பெற்ற “தமிழ் முழக்கம்”
எனும் இதழில்  எழுதப்பட்டுவந்த   ஆசிரியர் கட்டுரைகள் தொகுத்து
நூலாக்கப்பட்டுள்ளது.                 திரு.மா.ரா. இளங்கோவனால்,
திரு.ம.பொ.சிவஞானத்தால் பல  இதழ்களில்    எழுதி    வெளியான
ஆசிரியர்  கட்டுரைகளைத் திரட்டி, “ தலையங்க இலக்கியம் ” எனும்
பெயரில் ஆய்வுச் செய்யப்பட்டுள்ளது.

தேசீயக்    கவிஞர் சுப்பிரமணிய பாரதியாரால்   “ இந்தியா ”,
“ சக்கரவர்த்தினி ” எனும்   இதழ்களில் அவர்         எழுதியுள்ள
கட்டுரைகளைத்  தேடித்   திரட்டி முறையே 1979-லும்    1985-லும்
பதிப்பிக்கப்பட்டுள்ளன.

நண்பர்      முனைவர் ச. சு. இளங்கோ  அவர்கள் பாவேந்தர்
பாரதிதாசன்  கவிதைகளிலும் கட்டுரைகளிலும் நாடகங்களிலும் ஆழத்
தோய்ந்து படித்து,ஆராய்ந்து நல்லபல நூல்களை ஆதாரப் பூர்வமாக
வெளியிட்டு வந்துள்ளார்.அவர்    தற்போது      புரட்சிக்   கவிஞர்
பாரதிதாசனார்  நடத்தி வந்த “ குயில் ” எனும்  நாளிதழிலும், கிழமை
இதழிலும்,வார    இருமுறை    இதழிலும்          வெளியாகியுள்ள
தலையங்கங்களைத்  திரட்டி, ஆராய்ச்சிக்      கண்ணோட்டத்தோடு
அவற்றை    வகைப்படுத்தி, காலவரிசைப்படி             தொகுத்து
“ உலகுக்கோர் ஐந்தொழுக்கம் ” என்ற பாரதிதாசனார் கொடுத்திருந்த



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 11:12:56(இந்திய நேரம்)