தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Dravida Thai


முகவுரை
1
திரவிடத்தாய்
முகவுரை
உலக மொழிகளுள் தலைமையானவற்றுள் தமிழும் ஒன்றெனினும், பல்குழுவும் பாழ்செயும் உட்பகையும் தமிழகத்திலிருந்துகொண்டு, தமிழின் பெருமையைப் பிறநாடுகள் மட்டுமன்றித் தமிழ்நாடும் அறியாதபடி, அதனை மறைத்து வருவது மிக மிக இரங்கத்தக்கதொன்றாம். ஆராய்ச்சியாளரோ வெனின், ஓரிருவர் நீங்கலாகப் பிறரெல்லாம், பிறநாட்டுச் செய்திகளாயின் மறைந்த வுண்மையை வெளிப்படுத்துவதும், தமிழ்நாட்டுச் செய்திகளாயின் வெளிப்பட்ட வுண்மையை மறைத்து வைப்பதுமே தொழிலாகக் கொண்டுள்ளனர். ஆயினும், கார் காலத்தில் மறைக்கப்பட்ட கதிரவன் திடுமென ஒருநாள் திகழ்ந்து தோன்றுவதுபோல், தமிழும் ஒருநாள் உலகத்திற்கு வெளிப்படும் என்பதற்கு எட்டுணையும் ஐயமின்று.
 
தமிழே திரவிடத்தாய் என்பது மிகத் தெளிவாயிருப்பினும், 1891ஆம் ஆண்டிலேயே,
 
"கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந்துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும்"
 
என்று பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர்கள் திட்டமாய்க் கூறியிருப்பவும், ஆராய்ச்சியின்மையாலோ, கவலையின்மையாலோ, துணிவின்மையாலோ, தமிழ்ப்புலவர் எடுத்துக் காட்டாததினால், தமிழின் திரவிடத்தாய்மை பொதுமக்களால் அறியப்படாதிருப்பதுடன், தமிழ் ஒரு புன்சிறு புது மொழியினும் தாழ்வாகக் கருதப்படு கின்றது.
 
பெலுச்சித்தானத்திலும் வடஇந்தியாவிலும் இன்னும் திரவிட மொழிகள் வழங்குவதையும், வடநாட்டு ஆரிய மொழிகளிலும் திராவிட நெறிமுறைகளே அடிப்படையாய் அமைந்து கிடப்பதையும், குச்சரமும் (குசராத்தி), மராட்டியும் பண்டைக் காலத்தில் பஞ்சத் திராவிடிகளில் இரண்டாக வடமொழியாளராலேயே கொள்ளப்பட்டதையும், இந்தியமொழிகளிலெல்லாம் மூவிடப்பெயர்களும் முக்கியமான முறைப்பெயர்களும் தமிழ்ச் சொற்களாய் அல்லது தமிழ் வேரடிப் பிறந்தனவாயிருப்பதையும், சென்ற நூற்றாண்டில் தெலுங்கு நாட்டிற்கும் கன்னட நாட்டிற்கும் சென்ற தமிழ்க் குறவர் (எறுக்கலவாரு அல்லது கொரவரு) கூட, இன்று தமிழைத் தெலுங்கும் கன்னடமும் போல ஒலித்துப் பேசுவதையும், நோக்குமிடத்துத் தமிழிற் புணர்ச்சியும் பருசொன்னிலையும் தோன்றாத தொன்முது காலத்தில், தமிழே இந்தியா முழுதும் தனிப் பேராட்சி பெற்றிருந்தமை புலனாம்.
 
தட்ப வெப்ப நிலையினாலும், ஒலிமுறைச் சோம்பலினாலும், இலக்கிய விலக்கண அணைகரை யின்மையாலும், ஆரியக் கலப்பினாலும், தமிழா

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 12:03:32(இந்திய நேரம்)