Primary tabs
முகவுரை
சமற்கிருதத்தைப் பரப்புவதற்கென்றே ஏற்படுத்தப்பட்ட பூனாத்தெக்காணக் கல்லூரியின் சார்பாக, ஆண்டுதோறும் நடத்தப்பெறும் வேனிற்பள்ளியில் அறுகிழமையும் இலையுதிர்காலப் பள்ளியில் முக்கிழமையும் பயிற்சிபெற்ற அளவிலேயே வண்ணனை மொழிநூலறிஞராகக் கிளம்பும் ஆங்கில பட்டந்தாங்கியரான மாணவர், தமிழிலக்கியப் பரப்பையும், பொருளிலக்கணச் சிறப்பையும் குமரிநாட்டுத் தமிழ்ப்பிறப்பையும் எங்ஙனம் அறியவல்லார்? என்பதை அறிஞர் கண்டுகொள்க.
இந் நூலின் கட்டடமும், உய்ப்பும்பற்றித் திருநெல்வேலித் தென்னிந்திய சை.சி.நூ.ப.க. ஆட்சித் தலைவர் திரு வ.சுப்பையாப் பிள்ளை அவர்கள் செய்த உதவிகள் பாராட்டத்தக்கன.
மெய்ப்பொருள் காண்ப தறிவு."
பகுத்தறிவைச் சற்றும் பயன்படுத்தார் கல்வி
மிகுத்ததனா லுண்டோ பயன்.
முன்னூல்போ லிந்நூலும் முத்தா மெழுத்தடுக்கி
நன்னூலா யச்சிட்டு நல்கினன்காண் - இந்நாளும்
பேரான பாரி பெயர்தாங்கும் அச்சகத்தான்
நாரா யணன்செட்டி நன்கு.
காட்டுப்பாடி
விரிவு.
மடங்கல், 28.8.1968
ஞா.தேவநேயன்