Primary tabs
தங்கினார்கள். ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி
அந்தத்தலத்தில் தமிழ்த் தாயின்
தவப்புதல்வராகிய ஐயரவர்கள், தாம் பிறந்த காலத்தில்
கண்ட நிலையை
மாற்றித் தமிழ் மக்களைப் பழந்தமிழ்ச் செல்வத்துக்கு
உரிமையுடையவர்களாக
ஆக்கி, ஆசி கூறிவிட்டு இறைவன் திருவடியை
அடைந்தார்கள்.
1948 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் ஆறாம் தேதி சென்னை
அரசினர்
கல்லூரியில் ஐயரவர்களுடைய முழு உருவச் சிலையொன்றை
நிறுவினார்கள்.
தமிழ்க் கடலின் விரிவை மீட்டும் தமிழுலகத்துக்குக்
காட்டிய ஐயரவர்களின்
திருவுருவம் பெருங் கடலை நோக்கி நிற்கும்கோலத்தை
இன்றும் கண்டு
மகிழலாம்.
1955-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி
ஐயரவர்கள் பிறந்து
நூறு ஆண்டுகள் நிறைவடைந்தன. அதனை, அவர்கள் பெயர்
கொண்ட நூல்
நிலையம் மிகச் சிறப்பாகக் கொண்டாடிற்று.
ஐயரவர்களுடைய குணநலங்கள் பல சிறந்த பண்பு
உள்ளவர்கள்
இவர்கள். இணையற்ற ஆசிரியர். பலவகை மாணாக்கர்களுடைய
உள்ளம்
அறிந்து தக்கவண்ணம் பாடம் சொல்வதில் வல்லவர்கள்.
புலமைப்
பெருங்கடல்; கவிஞர்; சிறந்த எழுத்தாளர். முன்னும்
பின்னும் கண்டறியாத
அற்புதப் பதிப்பாசிரியர். சுப்பிரமணிய பாரதியார்
தாம் பாடிய பாட்டில்
காலமெலாம் புலவோர் வாயில்
துதியறிவாய் அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய்
இறப்பின்றித் துலங்குவாயே”
என்று அவர் பாடியிருப்பதற்குமேல் நாம் என்ன சொல்ல முடியும்?
கி.வா. ஐகந்நாதன்.