தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


களுக்கும் இந்நூலாசிரியர் என்றும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளார்.
இந்நூலிற்கானக் குறிப்புகளைப் பெறுவதற்கு உதவிய பல நூலகர்கள், 
பல நூல்களின் ஆசிரியர்கள், இதர பல பெரியோர்கள் ஆகியோருக்கும்
இந்நூலாசிரியர் தமது நன்றியைக் கூறிக்கொள்கிறார்.

இந்நூலை எழுத அனுமதி வழங்கிய அருள்மிகு பழனியாண்டவர் 
கலை, பண்பாட்டுக் கல்லூரி நிர்வாகத்தினருக்கு ஆசிரியர் தமது 
நன்றியைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறார்.

இந்நூலை வெளியிட்டு உதவிய பழனியப்பா பிரதர்ஸ் நூல்
வெளியீட்டாளருக்கு ஆசிரியர் தமது மனமார்ந்த நன்றியைக் 
கூறிக்கொள்கிறார்.

சில தலங்களைப்பற்றிய செய்திகள் இந்நூலில் விடப் பட்டிருக்கலாம்
அல்லது சில பண்பாட்டுச் சின்னங்களைப் பற்றிய குறிப்புகள் போதிய
அளவில் குறிப்பிடப்படாமலிருக்கலாம். இக்குறைகளும், இந்நூலின்
வாசகப் பெருமக்கள் சுட்டிக்காட்டும் இதர குறைகளும் இந்நூலிற்கான
அடுத்த பதிப்பில் சரி செய்யப்படும் என்று அன்புடன் கூறிக்
கொள்ளப்படுகிறது.

உலக வரலாறு, இந்திய வரலாறு, பிற நாடுகளின் வரலாறு, 
தமிழ் நாட்டு வரலாறு ஆகியவற்றை அறிய மாணவர்களுக்குப் பள்ளி
அளவிலும் கல்லூரி அளவிலும் அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆனால்,
தல வரலாற்றினை (Local History ) அறியப் போதிய வாய்ப்புகள்
அளிக்கப்படவில்லை. ஆரம்பக் கல்வி மட்டத்தில், நான்காவது 
வகுப்பில், ‘மாவட்ட வரலாறு’ என்ற பாடத்திட்டம் உள்ளது. எனினும்
இது போதாது. மேல்நிலைப்பள்ளி அளவிலும், கல்லூரிக் கல்வி 
அளவிலும் தல வரலாற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது
அவசியமாகும். நாம் வாழும் தலங்களின் வரலாற்றை நன்கு
தெரிந்துகொள்ளாமல், உலக வரலாற்றையும், பிற நாடுகளின் 
வரலாற்றையும் அறிய முற்படுவது முழுமையான வரலாற்றுப் படிப்பு 
ஆகாது. சென்னையின் வரலாறு, மதுரையின் வரலாறு போன்ற தல
வரலாறுகளைத் தேர்வுகளுக்கான பாடங்களாகக்கொள்ள வேண்டும்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 12:59:23(இந்திய நேரம்)