Primary tabs
ஆயினும் இந்திய நாகரிகமாகிய வாளில் தமிழக நாகரிகமே எஃகு ஆகும். வாள் உருவம்
நீங்கினும் எஃகு பயன்பெறும். எஃகை நீக்கி வாளை எண்ணுவதுகூட முடியாது. உண்மையில்
தமிழக நாகரிகம் இந்திய நாகரிகத்துக்கு அடிப்படை மட்டுமன்று; உலக நாகரிகத்துக்கும்
ஒரு தலையூற்று ஆகும். அதில் குறைபாடு உண்டானதற்குக் காரணம், உலகியல் வாழ்வையும்
அதற்கு அடிப்படையான அரசியல் வாழ்வையும் தமிழர் தமது பொறுப்பில் வைத்துக்
கொள்ளாமல் பிறர் பொறுப்பிலோ தம்மில் ஒரு சாரார் பொறுப்பிலோ விட்டு வைத்துச்
சோம்பல் ‘சமரச’ வேதாந்தத்தில் ஆழ்ந்தனர் என்பதே. உலக அரசியல் வரலாறு
உணர்ந்து தமிழர் தமிழகத்துக்கும் உலகுக்கும் தம் கடப்பாடும் பொறுப்பும் இவை என
உணர இச் சிறு நூல் உதவும் என எண்ணுகிறேன்.
சைதை
20-5-‘47
ஆசிரியர்.