தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).


இப்படி,  இன்னுஞ்சில செய்திகளை ஒன்றிரண்டு நூல்களிலிருந்து பெறமுடிந்தது.மற்றவையெல்லாம் என்அனுபவத்தின் மூலம் நான் அறிந்தவையாகும்.ஆம் ;  சுமார்  இருபதாண்டு காலம் இந்திய விடுதலைப் போரில் இரண்டறக்கலந்திருந்தேனாதலால் ,  நிகழ்ச்சிகள்   பலவற்றை நானே  அனுபவத்தில்அறிந்திருக்கிறேன். தமிழ் நாட்டின்   தலைநகரில் வாழ்கின்றவன்  ஆதலால்,விடுதலைப் "போராட்டத்தைப்பற்றி  அதிக அளவில் அறிந்துகொள்ள எனக்குவாய்ப்பு இருந்திருக்கிறது. அந்த வாய்ப்பைக் கொண்டுதான் இந் நூலை  நான்உருவாக்கியுள்ளேன்.

இந்நூலில், விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாற்றினை முழுமைப்
படுத்தி  விட்டேன்  என்ற  மனநிறைவை  நான்  கொள்ளுவதற்கில்லை .பல
நிகழ்ச்சிகள் , பல   பெரியோருடைய  பெயர்கள் ,   அவர்களுடைய அரிய
சாதனைகள் இந்நூலில் இடம்  பெறத்தவறியிருக்கலாம் . அதற்கு என்னுடைய
நினைவாற்றல்  போதுமான தாயில்லாததும் ஒரு காரணமாக இருக்கலாம். இந்
நூலில் இடம்  பெற்றுள்ள  நிகழ்ச்சிகளும் சுருங்கிய அளவில் இருக்கக்கூடும்.
இந்நூலில்  உள்ள சில செய்திகள், பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டவை
ஆதலால், அவற்றுள்  சில  பிழையானவையாகவு   மிருக்கலாம். வாசகர்கள்,
அந்தக்    குறைகளையும்  , பிழைகளையும்   எடுத்துக்   காட்டி   எனக்கு
எழுதுவார்களானால் , அடுத்த  பதிப்பில் அவற்றைச்  சரி  செய்து கொள்ள
இயலும்.

இந்திய    விடுதலைப்   போரின்    பின்பகுதி   சுமார் அறுபத்தைந்
தாண்டு    காலம் -   காங்கிரஸ்    மகாசபையின்     தலைமையின்   கீழ்
நடந்த   தென்பது   அனைவரும்   அறிந்ததாகும்.'காங்கிரஸ்'  என்று  சுருக்
கமாக   இன்று    அழைக்கப்படும்    அரசியல்   கட்சியானது  விடுதலைப்
போராட்ட     காலத்திலே  "அகில   இந்திய   தேசியக் காங்கிரஸ்  மகா
சபை"     என்னும்    பெயரினைப்    பெற்றிருந்தது.  ஆம்,  அன்றையக்
காங்கிரஸ் ,  ஆளுகின்ற   அன்னிய   ஏகாதிபத்திய  ஆட்சிக்கு   எதிராக,
ஆளப்படுகின்ற     மக்கள்     அனைவருக்கும்     பிரதிநிதித்துவமுடைய
ஒரே   தேசிய    மகாசபையாக    இயங்கியது .    இந்தத்   தேசியப்பண்
பினைத்    தனது   சிந்தையாலும் , வாக்காலும்,   செயலாலும்  அன்றைய
காங்கிரஸ்    வெளிப்படுத்தி   வந்தது.    விடுதலைப்   போர்  வெற்றிகர
மான  ஒரு   முடிவினைக்   கண்ட 1947    ஆகஸ்டு  பதினைந்தாம்  நாள்
வரை ,  இந்திய   சமுதாயத்தின்   ஒரே    தேசிய  மகாசபை   என்னும்
அந்தஸ்து    காங்கிரசுக்கு    இருந்து   வந்தது .  நாடு  விடுதலை பெற்ற


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 13:35:35(இந்திய நேரம்)