தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


     காந்தியைப் பற்றி தொடர்ந்து பதினான்கு ஆண்டுகளில் நான் எழுதிய
பாடல்களையெல்லாம் அவ்வப்போது சேகரித்துத் தொகுத்து, பிறகு நான் புத்தகமாக
வெளியிட உதவியவர் என் இனிய நண்பர் திரு. ரத்னம் அவர்கள்.

குழந்தைகள் உள்ளம் கவரும் வகையில் அழகான ஓவியங்களை வரைந்து தந்தவர்
தமிழகத்தின் சிறந்த ஓவியர்களில் ஒருவரான திரு. சாகர் அவர்கள். இப் புத்தகம் நல்ல
முறையில் அச்சாகி வெளிவரப் பல்வகையிலும் உதவியவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள்
திரு வெ. சுப. நடேசன் அவர்களும் திரு. ரத்னம் அவர்களுமாவர்.

இவர்கள் அனைவருக்கும் என் மனங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்
கொள்ளுகிறேன்.

‘காந்தி நூற்றாண்டு விழா’வில் இந்நூலின் முதற் பதிப்பைச் சிறுவருக்கு
வழங்கும்படியான வாய்ப்புக் கிடைத்தது. அதை எண்ணிப் பெருமைப்படுகிறேன். இந்
நூலுக்கு மத்திய அரசினர் பரிசளித்துப் பாராட்டினர். அதை நினைத்து மகிழ்ச்சி
அடைகிறேன்.

இந்நூல் சிறுவர் உலகுக்கு ஓரளவாவது பயன்படுமாயின் என் மகிழ்ச்சி
பன்மடங்காகப் பெருகும்.

குழந்தைகள் இன்பமே எனது இன்பம். அவர்களுக்குத் தொண்டு செய்வதே என்
முக்கிய குறிக்கோள்.

‘உமா இல்லம்’
ஏ.எல். 183, அண்ணாநகர்.
சென்னை-40

அழ. வள்ளியப்பா


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-08-2017 19:45:26(இந்திய நேரம்)