தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பதிப்புரை

கவியரசர் முடியரசன் 1920இல் பிறந்தவர். 1998இல் மறைந்தவர். வாழ்ந்த ஆண்டுகள் 78. எழுதிய நூல்கள் 25. இந்நூல்கள் அனைத்தையும் ஒருசேரத் தொகுத்து பொருள் வழிப் பிரித்து 13 தொகுதிகளாக கவியரசர் முடியரசன் படைப்புகள் எனும் தலைப்பில் ஒரே வீச்சில் வெளியிடுகிறோம். கவியரசர் முடியரசன் பாவேந்தர் பாரதிதாசன் வழிநிலை அறிஞர். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்ற பெருமக்களின் கொள்கையை தம் நெஞ்சில் தாங்கியவர்.

தன்னலம் கருதாது தமிழ்நலம் கருதியவர். தன்னை முன்னிறுத்தாது தமிழையும் தமிழரையும் முன்னிறுத்தியவர். இவர் எழுதிய நூல்கள் அனைத்தும் தமிழுக்கு வளமும் வலிவும் பொலிவும் சேர்ப்பன. தமிழர்களுக்குப் படைக்கருவிகளாக அரண் சேர்ப்பன.

நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும் உயர்ந்த அறிவுச் செருக்கும் கொண்ட பாரதியின் பாடலுக்கு சான்றாக வாழ்ந்து காட்டியவர்.

புதுநூற்கள் புதுக்கருத்தால்,
பொதுவகையால் தரவேண்டும்
புலவ ரெல்லாம்

எனும் பாவேந்தர் பாரதிதாசன் வரிகளுக்கு இலக்கியமாகவும் இலக்கணமாகவும் வாழ்ந்து மறைந்தவர். இருபதாம் நூற்றாண்டில் ‘பா’ உலகில் புதுமைப் பூத்த மரபுக் கவிஞர். இவர்தம் நூல்களை ஒருசேர வெளியிடுவதில் பெருமை அடைகிறோம்.

நன்றி

கோ. இளவழகன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 02:41:48(இந்திய நேரம்)