தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

தமிழில் சமயம் - பௌத்த கதைகள் -
இசைவாணர் கதைகள்

1952இல் பௌத்த கதைகள் எனும் நூலை மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் எழுதியுள்ளார். பௌத்தமும் தமிழும் என்ற நூலின் தொடர்ச்சியாகவே இந்நூலும் அமைகிறது. மனிதர்களுடைய செயல்பாட்டிற்கும் இயற்கை நிகழ்வுகளுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளைக் கதைகளாகக் கட்டிக்கூறும் மரபை பௌத்தம் கைக்கொண்டிருபபதைக் காண்கிறோம். சமயப் பரப்புதலில் கதைகூறல் என்பது ஒரு உத்தியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. நேரடியாகச் சமயக்கருத்துகளைக் கூறாமல் கதைகளின் மீது அக்கருத்துகளை ஏற்றிக் கூறும் மரபை பௌத்தம் மிகச் சிறப்புடன் செய்திருபபதைக் காண்கிறோம். அவ்வகையில் அமைந்தவையே இத்தொகுதியில் உள்ள கதைகள். இக்கதைகள் பௌத்த கருத்துகளை மிக எளிமை யாகவும் சுவையாகவும் வெளிப்படுத்துபவையாக அமைந்திருப்பதைக் காண்கிறோம். எடுத்துக்காட்டாக, ஒரு பிடி கடுகு என்னும் கதை, யாரும் இறக்காத வீட்டில் ஒரு பிடி கடுகு வாங்கவேண்டும் என்பது நியதி. அவ்விதம் முயன்றால் கடுகு பெறமுடியாது என்பது யதார்த்தம். இதன்மூலம் இறந்தவர்கள் பிறப்பார்கள் என்னும் இயற்கை நியதியை இக்கதை அழகாகச் சொல்வதைக் காண்கிறோம். இவ்விதம் அமைந்த 16 கதைகளை இத்தொகுதியில் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் தொகுத்து வழங்கியுள்ளார்கள்.

மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் 1977ஆம் ஆண்டு இசைவாணர்கதைகள் என்ற பெயரில் எழுதிய நூல் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளது. சமயம் தொடர்பான பல்வேறு புராணக்கதைகள் மற்றும் வரலாற்றுக் கதைகளை இந்நூலில் தொகுத்துள்ளார். இதற்கு

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 03:19:19(இந்திய நேரம்)