தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அகப்பொருள், புறப்பொருள் ஆகியவற்றை உள்ளடக்கிய இலக்கிய நூல்கள் 87, காவியம் மற்றும் பிற இலக்கிய வடிவங்களில் அமைந்த நூல்கள் 96, இசைத் தமிழ் நூல்கள் 13, நாடகத் தமிழ் நூல்கள் 22, இலக்கண நூல்கள் 107 ஆகியவை இந்நூலில் இடம் பெற்றுள்ளன. வாய்மொழி மரபிலோ அல்லது சுவடியாகவோ இருந்த இந்நூல்கள் அழிந்துவிட்டன. ஆனால் அந்நூற்செய்திகளைப் பிற்கால நூலாசிரியர்களும் உரையாசிரியர்களும் எடுத்துப் பயன்படுத்தி யுள்ளனர்.

சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் பழமையுள்ள தமிழ்மொழி மற்றும் இலக்கிய மரபில் இவ்வகையான நிகழ்வு சாத்தியமே. ஆனால் மறைந்து போனவற்றில் எஞ்சியுள்ளவற்றை பதிவு செய்வது அவசியம். அப்பணியை மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் சிறப்பாகச் செய்துள்ளார்.

இத்தொகுப்புகள் உருவாக்கத்தில் தொடக்க காலத்தில் உதவிய ஆய்வாளர்கள் மா. அபிராமி, ப. சரவணன் ஆகியோருக்கும் இத்தொகுதிகள் அச்சாகும் போது பிழைத்திருத்தம் செய்து உதவிய ஆய்வாளர்கள் வி. தேவேந்திரன், நா. கண்ணதாசன் ஆகியோருக்கும் நன்றி.

சென்னை - 96
ஏப்ரல்2010

வீ. அரசு
தமிழ்ப்பேராசிரியர்
தமிழ் இலக்கியத்துறை
சென்னைப் பல்கலைக்கழகம்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 03:41:42(இந்திய நேரம்)