தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1212


--  எனவே,  மற்றைத்  திணைக்கண்ணும்  உள,  சிறு  வரவின எனக்
கொள்க. 

அவை வருமாறு  : ‘குறையறப்  பூத்த  கொடி முல்லாய்’  என்புழி,
முல்லை - முல்லாய் எனவும், 

‘செங்கால் நாராய்’ என்புழி,  செங்கால்  நாரை  செங்கால்  நாராய்
எனவும் வரும். பிறவும் அன்ன. (3) 

118. அவற்றுள்
இ ஈ யாகும் ஐ ஆ யாகும்.
 

இச்    சூத்திரம்    என்னுதலிற்றோ   வெனின்,   இகர   ஐகாரங்கள்
விளியேற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. 

நம்பி - நம்பீ என, இ - ஈயாய் விளியேற்றது. 

நங்கை   -   நங்காய்   என,  ஐ   -   ஆயாய்   விளியேற்றது.
இங்ஙனமாதல்,‘ஈறுதிரிதல்’. 4 

119, ஓவும் உவ்வு மேயொடு சிவணும். 

இச்  சூத்திரம்  என்னுதலிற்றோ  வெனின்,  ஒகார  ஈறும் உகர ஈறும்
விளியேற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. 

கோ - கோவே என, ஒகார ஈறு ஏகாரமொடு சிவணிற்று. 

வேந்து - வேந்தே என, உகரம் ஏயொடு சிவணிற்று. 

இம் முடிபு, ‘பிறிது வந்தடைதல்’ ஆம். 5 

120. உகரந் தானே குற்றிய லுகரம். 

இச்  சூத்திரம் என்னுதலிற்றோ  வெனின்,  ஐயமறுத்தல்  நுதலிற்று;
மேலதற்கோர் புறனடையெனினும் அமையும். 

உரை :  கூறப்பட்ட  நான்கினுள்,  உகரம்  குற்றியலுகரம்  என்பது
அறியாது நின்றவழி, முற்றுகரம் அன்று குற்றுகரம் என்பது கருத்து. 6 

121. ஏனை யுயிரே யுயர்திணை மருங்கிற்
றாம்விளி கொள்ளா வென்மனார் புலவர்.
 

இச்   சூத்திரம்  என்னுதலிற்றோ  வெனின்,  எய்தாதது  எய்துவித்தல்
நுதலிற்று; ஐயமறுத்தது எனினும் அமையும். 

உரை :  சொல்லப்பட்ட நான்கு  உயிரெழுத்துமல்லால் மற்றையன
உயர்திணைக்கண் விளியேலா என்றவாறு. 

மற்று, கொள்வன  இவை  யெனவே,  ஒழிந்தன கொள்ளா என்பது
யானே  உணரேனோ,  இது  சொல்ல  வேண்டியது  என்னையெனின்,
ஏனை   உயிர்   உயர்திணைக்   கண்விளிகொள்ளா  என,  இன்னும்
மேற்சொல்லப்பட்டன மேல் ஓதியவா
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 15:22:36(இந்திய நேரம்)