Primary tabs

யின் ஓவாகத் திரிவது, அல்லாக்கால் வேண்டா என்பது. (14)
209. ஆயென் கிளவியு மவற்றொடு கொள்ளும்.
இச் சூத்திரம் என் நுதலிற்றோ வெனின், இதுவும் ஆ ஓவாகல்
ஒப்புமை கண்டு, விரவுவினைச்சொல் ஈறு செய்யுளுட்டிரியுமாறு
உணர்த்துதல் நுதலிற்று.
உரை : ஆய் என்னும் சொல்லின் ஆகாரமும் ஓவாகும் செய்யுள்
என்றவாறு.
வரலாறு :
‘வந்தாய் மன்ற தண்கடற் சேர்ப்ப’ என்பது, ‘வந்தோய்
மன்ற தண்கடற் சேர்ப்ப’ [அகம் - 80] என்றவாறு. (15)
210.
அதுச்சொல்வேற்றுமை யுடைமையானுங்
கண்ணென் வேற்றுமை நிலத்தி னானு
மொப்பி னானும் பண்பி னானுமென்
றப்பாற் காலங் குறிப்பொடு தோன்று
மன்மையி னின்மையி னுண்மையின் வன்மையி
னன்ன பிறவுங் குறிப்பொடு கொள்ளு
மென்ன கிளவியுங் குறிப்பே காலம்.
இச் சூத்திரம் என் நுதலிற்றோவெனின், நிறுத்த முறையானே
உயர்திணைக்குரிய வினைக்குறிப்புச்சொல் உணர்த்துதல் நுதலிற்று.
இக் கூறப்பட்ட எட்டுப் பொருண்மையும் பற்றித் தோன்றுங்கால்
வினைக்குறிப்புச் சொல்லொடு தோன்றும் என்றவாறு.
உரை :
அதுச்சொல் வேற்றுமை - ஆறாம் வேற்றுமை, அதன்
பொருள் பல, அவற்றுள் அவ்வுடைமைப் பொருள்பற்றி உயர்திணை
வினைக்குறிப்புச்சொல் பிறக்கும் என்றவாறு.
வரலாறு : உடையன், உடையள், உடையர் எனவரும்.
கண்ணென் வேற்றுமை நிலத்தினானும் பற்றிப் பிறந்தன :
நிலத்தன், நிலத்தள், நிலத்தர் என்பன.
உவமைப் பொருள் பற்றிப் பிறந்தன :
பொன்னன்னன், பொன்னன்னள், பொன்னன்னர் என்பன.