தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1251


பல்லோர்  படர்க்கையும்  முன்னிலையும் தன்மையுங்கொண்டு முடிதல்
இல்லை என்றவாறு. 

எனவே, ஒருவன்படர்க்கை,  ஒருத்திபடர்க்கை,   ஒன்றன்படர்க்கை,
பலவற்றுப்படர்க்கை என நான்குமே அஃது உரித்தாவது என்றவாறு. 

வரலாறு : அவன்  உண்ணும், அவள்  உண்ணும்,  அது உண்ணும்,
அவை உண்ணும். 

இவ்வாறு  விலக்கப்பட்ட வியங்கோட் சொல்லும், செய்யும் என்னும்
முற்றுச்சொல்லும்  ஒழித்தொழிந்தனவெல்லாம்  இருதிணை ஐம்பாற்கும்
மூன்றிடத்தும் உரிய, வழக்கினகத்துக் கண்டுகொள்க. 

* அவை வருமாறு : 

இன்மை  செப்பல்    :   யானில்லை,   நீயில்லை,   அவனில்லை,
அவளில்லை, அவரில்லை, அதுவில்லை, அவை யில்லை என வரும். 

*  வேறு என் கிளவி  : யான்வேறு, நீ வேறு, அவன் வேறு, அவள்
வேறு, அவர் வேறு, அது வேறு, அவை வேறு என வரும். 

*  செய்ம்மண்  -  யான்  செய்ம்மன  :  நீ  செய்ம்மன,  அவன்
செய்ம்மன,  அவள்  செய்ம்மன,  அவர் செய்ம்மன, அது செய்ம்மன,
அவை செய்ம்மன என வரும். (28) 

* இப் பகுதிகள் சில ஏடுகளில் காணப்படவில்லை. 

223. செய்து செய்யூச் செய்பு செய்தெனச்
செய்யியர் செய்யிய செயின்செயச் செயற்கென
வவ்வகை யொன்பதும் வினையெஞ்சு கிளவி.

224. பின்முன் கால்கடை வழியிடத் தென்னு
மன்ன மரபிற் காலங் கண்ணிய
என்ன கிளவியு மவற்றியல் பினவே. 

இச்     சூத்திரம் என் நுதலிற்றோ வெனின், வினையெச்சங்களைப்
பெயரும்  முறையும்  தொகையும் உணர்த்துதல் நுதலிற்று. இவ்விரண்டு
சூத்திரம் உடன் எழுதப்பட்டது உரையியைபு நோக்கி. 

உரை     : செய்து, செய்யூ என்பது முதலாக ஒன்பதும், பின் முன்
என்னுந்    தொடக்கத்தன   ஆறும்,   ஆக   இவை   பதினைந்தும்
வினையெச்ச வினைச்சொல் என்றவாறு. 

வினையை ஒழிபாக நிற்றலின் வினையெச்சம் எனப்பட்டன. 

இனி, ‘என்ன கிளவியும்’ என்றதனான், உண்பான் வந்தான்,
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 15:29:48(இந்திய நேரம்)