Primary tabs

டியாக்கால் ஒழிந்த எச்சங்கள் முடியா என்பதாம்.
இனிப், பலவினத்து எச்சம் அடுக்கிவருமாறு வழக்கினகத்துக்
கண்டுகொள்க. (34)
229.
நிலனும் பொருளுங் காலமுங் கருவியும்
வினைமுதற் கிளவியும் வினையு முளப்பட
வவ்வறு பொருட்குமோ ரன்ன வுரிமைய
செய்யுஞ் செய்த வென்னுஞ் சொல்லே.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், செய்யும் செய்த
என்னப்பட்ட இரண்டு பெயரெச்சத்திற்கு முடிபு உணர்த்துதல்
நுதலிற்று.
உரை :
சொல்லப்பட்ட ஆறு சொல்லொடு முடியும்
அவ்விரண்டெச்சம் என்பது.
அவற்றுள் செய்யும் என்பது பல்லோர் படர்க்கை, முன்னிலை,
தன்மை யொழித்தொழிந்த நான்குபாற்கண் வருமாறு ஈண்டுக்
காட்டுதும், ஒழிந்தனவும் மேல்வருகின்ற சூத்திரத்தாற் பெறுதும்.
நிலன் : அவன் உண்ணும் இல்லம், அவள் உண்ணும் இல்லம், அது
உண்ணும் இல்லம், அவை உண்ணும் இல்லம் என வரும்.
பொருள் : அவன் செய்யும் பொருள், அவள் செய்யும் பொருள்,
அது செய்யும் பொருள், அவை செய்யும் பொருள் என வரும்.
காலம் : அவன் ஓதுங் காலை, அவள் ஓதுங் காலை, அது ஓதுங்
காலை, அவை ஓதுங் காலை என வரும்.
கருவி : அவன் எறியுங் கல், அவள் எறியுங் கல், அது எறியுங் கல்,
அவை எறியுங் கல் என வரும்.
வினைமுதற் கிளவி : உண்ணும் அவன், உண்ணும் அவள்,
உண்ணும் அது, உண்ணும் அவை என வரும்.
வினை : அவன் உண்ணும் ஊண், அவள் உண்ணும் ஊண், அது
உண்ணும் ஊண், அவை உண்ணும் ஊண் என வரும்.
இனிச், செய்த என்பது மூன்றிடத்தொடுஞ் சிவணி, ஐந்துபாற்கும்
உரித்து.
அது வருமாறு : அவன் உண்ட இல்லம், அவள் உண்ட இல்லம்,
அவர் உண்ட இல்லம், அது உண்ட இல்லம், அவை உண்ட இல்லம்
என வரும்.
ஒழி