Primary tabs

ரிமையு முடைத்தே.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இதுவும் வினைச் சொற்படும்
பகுதி வேற்றுமை உணர்த்துதல் நுதலிற்று.
உரை :
வன்புறவரூஉம் என்பது -- திட்பஞ்செய்தற்கு வரூஉம்
என்றவாறு ; வினாவுடை வினைச்சொல் என்பது -- ஆ, ஏ, ஓ என்னும்
வினாவினையுடைத்தாய் வருஞ் செய்கைச் சொல் என்றவாறு ;
எதிர்மறுத்து உணர்த்தற்கு உரிமையும் உடைத்தே என்பது
--மறுதலைப்பட உணர்த்துதற்கு உரிமையும் உடைத்து என்றவாறு.
வரலாறு : ஒருவனை ஒருவன், ‘வைதேனோ?’ என்று வையாமையை
வலியுறுத்தற்கு வினாயக்கால், அது, ‘வைதேன்’ என்று நேர்வுபடும்
என்றவாறு.
உம்மை யெதிர்மறை யாகலான், வைதிலேன் என்றும் நேர்வுபடும்
சிறுபான்மை. (45)
240.
வாராக் காலத்து வினைச்சொற் கிளவி
இறப்பினு நிகழ்வினுஞ் சிறப்பத் தோன்றும்
இயற்கையுந் தெளிவுங் கிளக்குங் காலை.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இதுவும் கால வழூஉக்காத்தல்
நுதலிற்று.
உரை :
எதிர்காலத்துச் செயற்கைச்சொல் இறந்த காலத்தையும்
நிகழ்காலத்தையுங் கொள்ளும், இயற்கைக் கண்ணும்
தெளிவின்கண்ணும் சொல்லுமிடத்து என்றவாறு.
இயற்கை என்பது அதன்மேற் றீமை. தெளிவு என்பது ஒரு
நூன்முடிபானும் பிறிதானும் கண்டுதெளிதல்.
வரலாறு :
இக்காடு போகிற் கூறைகோட்பட்டான் ; கூறை
கோட்படும். இஃது இயற்கை.
இனித் தெளிவு : எறும்பு முட்டைகொண்டு தெற்றி யேறின் மழை
பெய்தது ; மழை பெய்யும் என்பது.
‘சிறப்பத் தோன்றும்’ என்பது, அவ்விரு காலத்