Primary tabs

லித்தல்.
விரிக்கும்வழி விரித்தல் :
தண்டுறைவன் எனற்பாலதனைத்,
‘தண்ணந் துறைவன்’ (குறுந் - 296)
என விரித்தல்.
தொகுக்கும்வழித் தொகுத்தல் :
மழவரை யோட்டிய எனற்பாலதனை,
‘மழவரோட்டிய’ (அகம் - 1)
எனத் தொகுத்தல்.
நீட்டும்வழி நீட்டல் :
பச்சிலை எனற்பாலதனைப்,
‘பாசிலை’ (புறம் - 54)
என நீட்டல்.
குறுக்கும்வழிக் குறுக்கல் :
உண்டார்ந்து என்பதனை,
‘உண்டருந்து’
எனக் குறுக்கல்.
பத்து வகை விகாரத்துள் அறுவகை விகாரம் ஈண்டுக் கூறினார்.
இனமில்லதனை இனமுள்ளது போலச் சொல்லுதலும், இனமுள்ளதனை
இனமில்லது போலச் சொல்லுதலும்,
‘இனச்சுட் டில்லாப் பண்புகொள் பெயர்க்கொடை’
(தொல். கிளவியாக் - 18)
என்பதனுட் சொல்லிப்போந்தாம்.
இனி, இடைச்சொற் போக்கல், புடைச்சொற் புகுத்தல் என
இரண்டும்,
‘நிரனிறை சுண்ண மடிமறி மொழிமாற்று’ (தொல். எச்ச-8)
எனப்பட்டு அடங்கும். (7)
398.
நிரனிறை சுண்ண மடிமறி மொழிமாற்
றவைநான் கென்ப மொழிபுண ரியல்பே
என்பது, நிரனிறை, சுண்ணம், அடிமறி, மொழிமாற்று என நான்கு
வகையான் மொழிகள் தம்முள் புணருஞ் செய்யுளகத்து என்பது
உணர்த்தியவாறு.
அவையாமாறு அவற்றவற்றுச் சிறப்புச் சூத்திரங்களால் அறிக. (8)
399.
அவற்றுள்
நிரனிறை தானே
வினையினும் பெயரினும் நினையத் தோன்றிச்
சொல்வேறு நிலைஇப் பொருள்வேறு நிலையல்.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், நிரனிறைப் பொருள்கோள்
ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.
உரை : இச் சொல்லப்பட்டவற்றுள் நிரனிறை யென்ற
சொல்லப்படுவதியாதோவெனின், வினையினானும் பெயரினானும்
ஆராயத் தோன்றிச் சொல் வேறு வேறு நிற்பப் பொருள் வேறு வேறு
நின்று உணரப்படும் என்றவா