தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1301


து துணிந்து இயற்ற வரும் என்றவாறு. 

வரலாறு ; 

‘சுரையாழ வம்மி மிதப்ப வரையனைய
யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப
கானக நாடன் சுனை’
 

என வரும். 

இதனை ஒட்டுமாறு : 

மொழிகளை, ‘சுரை மிதப்ப, அம்மி யாழ, யானைக்கு நிலை, முயற்கு
நீத்து’ எனத் துணித்து இயற்றுக. 

‘பட்டாங்  கமைந்த’ என்பது, இயைபுடைய செய்யுள் நடைக்கொத்த
அடியாகல்வேண்டும் என்றற்கு என்பது. () 

401. அடிமறிச் செய்தி யடிநிலை திரிந்து
சீர்நிலை திரியாது தடுமா றும்மே.
 

இச்சூத்திரம்   என்னுதலிற்றோ   வெனின்,  அடிமறிப் பொருள்கோள்
ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. 

உரை :  அடிமறி என்று சொல்லப்படுவது சீர் கிடந்துழியே கிடப்ப,
அடிகள் முதலும் இடையும் கடையும் படச் சொல்லிக் கண்டுகொள்க. (11)

402. பொருடெரி மருங்கி
னீற்றடி யிறுசீ ரெருத்துவயிற் றிரியுந்
தோற்றமும் வரையா ரடிமறி யான.
 

இச்சூத்திரம்   என்னுதலிற்றோ   வெனின்,   எய்தியது   விலக்குதல்
நுதலிற்று. 

உரை :  அடிமறிப்   பொருள்கோள்,  ஆராயுமிடத்து,  ஈற்றடியின்
இறுதிச்சீர் எருத்தத்துச் சீராய்க் கிடந்தும் வரையப்படாது என்றவாறு. 

வரலாறு : 

‘சார னாட நீவர லாறே
வார லெனினே யானஞ் சுவலே’
 

என்புழி,   அஞ்சுவல்   யான்   என   இறுதிச்  சீர்  எருத்து  வயிற்
றிரிந்தவாறு கண்டுகொள்க. இவ்வாறு எங்கும் மாற்றுக. (12) 

403. மொழிமாற் றியற்கை
சொன்னிலை மாற்றிப் பொருளெதி ரியைய
முன்னும் பின்னும் கொள்வழிக் கொளாஅல்.
 

இச்சூத்திரம்  என்னுதலிற்றோ வெனின், ஒழிந்து நின்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 15:38:59(இந்திய நேரம்)