Primary tabs

வான், அத்தொகைக்கண் முன்னதன் பொருளுணர்தலுற்றுச்
சொல்லுதல், பின்னதன் பொருளுணர்தலுற்றுச் சொல்லுதல், இரண்டுடன்
பொருளுணர்தலுற்றுச் சொல்லுதல், இரண்டின்மேலும் நில்லாது
பிறிதோர் பொருளுணர்தலுற்றுச் சொல்லுதல் என நால்வகை
யிலக்கணத்தாற் பொருளுணர நிற்கும் என்றவாறு.
அவற்றுள், முன்மொழிப் பொருளுணர நின்றது, ‘வேங்கைப்பூ’
என்பது.
முன்மொழி பின்மொழி யாதல், இடமும் காலமும் என இருவகையால்
உணரப்படும். அவற்றுள் இடத்தான் முன்மொழிப் பொருளாயிற்று ;
காலவகை நோக்கிப் பின்மொழிப் பொருளாம்.
வேங்கை என்பதும் பொருள் இல்லாததன்றுமன் ; அப்
பொருளுடன் அறிய லுற்ற பூவினை, அதனைச் சிறப்பிப்பான் வந்தது
வேங்கை என்னுஞ் சொல் என்பது.
இருமொழிப் பொருள் உணர நின்றது உவாப் பதினான்கு என்பது.
பிறவும் உம்மைத் தொகையான் வருவனவெல்லாம் இருமொழிப்
பொருள்பட நிற்கும் என உணர்க.
அம் மொழிநிலையாது அன்மொழிப் பொருட்பட நின்றன, முன்
அன்மொழித் தொகைப்படக் காட்டினவெல்லாம் என்பது.
அவை, வெள்ளாடை என்னுந் தொடக்கத்தன.
மற்று இன்னுழிப் பொருள்நிற்கும் எனின், ஒழிந்துழி யெல்லாம்
பொருளில்லையாமாகாதே, ஆகவே,
‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’
(தொல்-பெயரி-1)
என்பதனோடு மலைக்கும்