Primary tabs

1.
உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை என்மனார் அவரல பிறவே
ஆயிரு திணையின் இசைக்குமன் சொல்லே.
என்பது சூத்திரம்.
இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோ
எனின்,
மேற்பாயிரத்துள் ‘எழுத்துஞ் சொல்லும்
பொருளும் நாடி’ என
நிறுத்தமுறையானே எழுத்து உணர்த்திச்
சொல் உணர்த்துகின்றார்
ஆதலின், சொல்லதிகாரம் என்னும்
பெயர்த்து. அது, ‘சொல்லை
உணர்த்திய முறைமை’ என விரியும்.
‘சொல்’ என்றது, எழுத்தினான் ஆக்கப்பட்டு இருந்திணைப் பொருட்
டன்மையும் ஒருவன் உணர்தற்குக் கருவியாம் ஓசையை. ஈண்டு ‘ஆக்கப்
படுதல்’ என்றது, ஒருசொற் கூறுமிடத்து ஓரெழுத்துப் போக ஓரெழுத்துக்
கூறுவதல்லது, ஒரு சொல்லாக முடியும் எழுத்தெல்லாஞ் சேரக் கூறலா
காமையின், அவ் வெழுத்துக்கள் கூறிய
அடைவே போயினவேனுங்
கேட்டோர் கருத்தின்கண் ஒரு தொடராய்
நிலைபெற்று நின்று
பொருளை அறிவுறுத்தலை. ஆயின்,
ஓரெழுத் தொருமொழிக்கு
ஆக்குதல் இன்றாலெனின், ஓரெழுத் தொருமொழியைக்
கூறியக்கால்
அதுவுஞ் செவிப் புலனாய்க்
கருத்தின்கண் நிகழ்ந்து பின்னர்ப்
பொருளை ஆக்குதலின், அதுவும் ஆக்குந் தன்மை உடையதாயிற்று.
இருதிணைப் பொருளுமாவன, ஐம்பாற்