Primary tabs

நின்று வினைமேல் தத்தம் மரபினான் வந்தன.
‘வினைச்சொல்லான்
விளங்கும்,’ எனவே, அதனிலுள்ள காலமும்
இடனும் மயங்காமையும் பெற்றாம்.
அவை, ‘உண்டேன் நெருநல்,
உண்ணா நின்றேன் இன்று, உண்கு நாளை; யான் வந்தேன், நீ வந்தாய்,
யாம் வந்தேம், நீயிர் வந்தீர் என வரும்.
இனி,
‘உய்த்துக்கொண்டு உணர்த்தல் (மரபியல் 110) என்பதனான்,
‘தம்மரபின என்பதனைப் பிரித்து
வேறொரு தொடராக்கி, மரபு
மயங்காமையும் கொள்க. அவை, யானை
மேய்ப்பானைப் பாகன்
என்றலும், யாடு மேய்ப்பானை இடையன் என்றலுமாம்.
இச்சூத்திரத்தான்,
திணையும் பாலும் இடமும் காலமும் மரபும்
வழுவாமற் காத்தார்.
இனி,
‘மயயங்கல் கூடா,’ என்பதனானே ‘மயங்குதலும் உண்டு,’
என்பது பெற்றாம். அம்மயக்கம் எழுவகைய என்பது உரையிற் கோடும்.
அவை திணை மயக்கமும், பால் மயக்கமும்,
கால மயக்கமும், இட
மயக்கமும், செப்பு மயக்கமும், வினா மயக்கமும், மரபு மயக்கமும் என
ஏழாம். இவை மயங்கும் எனவே, வழுவாதல் பெற்றாம்.
உண்டான்
அது, உண்டன் அவை, உண்டாள் அது, உண்டாள்
அவை, உண்டார் அது, உண்டார் அவை, உண்டது அவன், உண்டன
அவன், உண்டது அவள், உண்டன அவள், உண்டது அவர், உண்டன
அவர்-இவை
திணை வழு.
உண்டான்
அவள், உண்டான் அவர், உண்டாள் அவன், உண்டாள்,
அவர், உண்டார் அவன்,