Primary tabs

லக்கிற்று.
(இ-ள்.) ஆக்கக்
கிளவி - ‘காரணமுதற்று,’ என்ற ஆக்கச் சொல்,
காரணமின்றியும் போக்கு இன்று என்ப
- காரணமின்றி வரினும்
குற்றமின்று என்று கூறுப, வழக்கினுள்ளே-வழக்கிடத்து, எ-று.
(எ-டு.)
மயிர் நல்லவாயின,
பயிர் நல்லவாயின,
என வரும்.
எனவே, செய்யுட்குக் காரணம் பெற்றே வருமாயிற்று.
‘வருமழைய வாய்க்கொள்ளும் வாடாச்சீர் வண்கைக்
கருமுருகன் சூடீய கண்ணி-திருநுதாஅல்!
இன்றென் குரற்கூந்தற் பெய்தமையாற் பண்டைத்தம்
சாயல வாயின தோள்.’
என இது காரணமும் ஆக்கமும் பெற்றது.
‘குருதி படிந்துண்ட காகம் உருவிழந்து
குக்கிற் புறத்த சிரல்வாய’
(களவழி.5)
என இதற்கு ஆக்கம் விகாரத்தான் தொக்கது என்று உணர்க.
‘அரிய கானஞ் சென்றோர்க்
கெளிய வாகிய தடமென் தோளே.’
(குறுந்.77)
இதற்குக்
‘கற்புக் காலத்தான் தோள் எளியவாயின,’ என
அக்காலங்
காரணமாயிற்று.
உம்மை
எதிர்மறையாகலான், காரணம் கொடுத்துச்
சொல்லுதலே
வலியுடைத்து. (22)
பால் ஐயமுள்வழிச் சொல் நிகழுமாறு
23.
பால்மயக் குற்ற ஐயக் கிளவி
தானறி பொருள்வயின் பன்மை கூறல்.
இது
மேல் ‘இயற்கை, செயற்கை’ எனப்
பகுத்த பொருள்களுள்
திணையுணர்ந்து பால்ஐயந் தோன்றியவழி
அவ்வையப்பொருள்மேற்
சொல் நிகழ்த்துமாறு கூறுகின்றது.
(இ-ள்.)
பால் மயக்குற்ற ஐயக்கிளவி - திணை துணிந்து
பால்
துணியாது நின்ற ஐயப்பொருளை,