தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   497


ிணைப்  பிரிப்பினும்  -  ஒருமையும்   பன்மையுமாகப்   பிரிக்கப்படும்
அஃறிணை  இயற்பெயராகிய பொதுச்சொற்கண்ணும், உரித்து-ஐயத்தைப்
புலப்படுத்தும் பொதுவாகிய தன்மை உரித்து, எ-று. 

குற்றிகொல்லோ மகன்கொல்லோ இத்தோன்றாநின்ற உருவு?
ஒன்றுகொல்லோ பலகொல்லோ இச்செய் புக்க பெற்றம்? எனவரும்.

‘உருவினும்’   என்னாது,   ‘உருவென  மொழியினும்’ என்றதனான்,
உருவின்    பொருளவாகிய   வடிவு,   பிழம்பு,   பிண்டம்   என்னுந்
தொடக்கத்தனவும் கொள்க. 

உருவு  முதலியன  உயர்திணைப் பன்மை ஒருமைப்பால் ஐயத்திற்கு
ஏலாமையும்  ஏனைத்  திணை  ஐயத்திற்கு  ஏற்புடைமையும் தோன்றச்
‘சுட்டுங்காலை’ என்றார். 

‘உருபு’  எனப்  பகர  உகரமாகப்  பாடம் ஓதின், அது வேற்றுமை
உருபிற்கும்  உவம உருபிற்கும் பெயராய், வடிவை உணர்த்தாது என்று
உணர்க. ‘அதுவென் உருபுகெட’ (95) எனவும், ‘உருபினும் பொருளினும்
மெய்  தடுமாறி’ (102) எனவும், ‘உருபு தொடர்ந்தடுக்கிய’ (103) எனவும்,
‘உருபு  தொக   வருதலும்’ (105)  எனவும்,  ‘மெய்யுருபு தொகா’ (106)
எனவும், ‘யாதன்   உருபின்’  (107) எனவும் பிறாண்டும் வேற்றுமைக்கு
‘உருபு’  என்றே  சூத்திரஞ் செய்தவாறு காண்க. ‘உவம உருபு’ என்றல்
அவ்வோத்திற் கூறிய உரைகளான் உணர்க. 

அன்றியுஞ்  சான்றோர் செய்யுட்களிலும் ‘உருவு கிளளர் ஒளிவினை’
(அகம். 142)   எனவும்,   ‘ஞாயிற்   றுருவுகிளர்  வண்ணங் கொண்ட’
(பதிற்.52: 29, 30)   எனவும்,   ‘உருவக்  குதிரை’ (அகம்.1: 2) எனவும்,
‘வேண்

  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 17:17:48(இந்திய நேரம்)