Primary tabs

இவற்றிற்கு
ஐந்தாம் உருபு விரித்தலும் ஒன்று, ‘பெண்டாட்டியின்
அல்லன்’ என.
இனிச்
சேனாவரையர் முன்னிற்சூத்திரத்தின்
உருவென்பதனை
‘ஆண்மகன்கொல்லோ பெண்டாட்டிகொல்லோ
இத்தோன்றாநின்ற
உருபு? எனப் பால் ஐயத்திற்கு ‘உருபு’ என்னும் ஐயப்புலப்
பொதுச்சொல் உரித்து என்று
உதாரணங்காட்டி, இச்சூத்திரத்தின்
‘அண்மைக்கிளவி மறுக்கப்படும்
பொருள்மேல் ஆம்,’ என்று
கூறினாராலெனின், அவர் உதாரணங்
காட்டியவற்றின் ஆண்மகன்
என்று துணிந்தவழிப் ‘பெண்டாட்டி அல்லள், ஆண்மகன்,’ என்றும்,
பெண்டாட்டி என்று துணிந்தவழி ‘ஆண்மகன் அல்லன், பெண்டாட்டி,’
என்றும் மறுக்கப்படும் பொருள் மேல் அண்மை கூறி, அவற்றிற்கு
‘இவ்வுருவு பெண்டாட்டி அல்லள், ஆண் மகன், என்றும், ‘இவ்வுருவு
ஆண்மகன் அல்லன், பெணடாட்டி,’ என்றும் ‘உருவு’ என்னுஞ் சொல்
கூட்டியே பொருள் முடிக்க வேண்டுதலின்,
‘உருவு’ என்னும்
அஃறிணைப்பெயர் ‘அல்லன், அல்லள்’
என்னும் உயர்திணை
வினைக்குறிப்பொடு முடியாமை
உணர்க. அன்றியும், ‘இவன்
பெண்டாட்டி அல்லள், ஆண்மகன்; இவள்
ஆண்மகன் அல்லன்,
பெண்டாட்டி என அவர் சொல் முடித்தற்குக் கூட்டிய சுட்டுப்பெயர்
கூட்டினும் முடியாமையும் உணர்க. இனி, ‘குற்றியோ மகனோ!’ என்று
ஐயுற்றான் மகனென்று துணிந்தது,
மக்கள் தன்மையை ஆண்டுப்
பெற்றன்றே? அது