Primary tabs

களும், கூடி வரு வழக்கின் ஆடு இயல் பெயரே-இளந்துணை மகார்
தம்மிற்கூடி விளையாடல் குறித்த பொழுதைக்குத் தாமே படைத்
திட்டுக் கொண்ட பெயர்களும், இன்றிவர் என்னும் எண் இயல்
பெயரோடு - இத்துணையார் எனத் தமது வரையறை உணர நின்ற
எண்ணாகிய இயல்பு பற்றிப் பொருள் உணர்த்தும் பெயருடனே, அன்றி
அனைத்தும் அவற்று இயல்பினவே - அவ்வனைத்துப் பெயர்களும்
மேற்கூறிய பெயர்கள் போலப் பால் அறியவந்த உயர்திணைப்
பெயராம், எ-று.
(எ-டு.) ‘அருவாளன், சோழியன்’ எனவும்; ‘சேரமான், மலையமான்,
பார்ப்பார், அரசர், வாணிகர், வேளாளர், எனவும்; ‘அவையத்தார்
அத்தி கோசத்தார், வணிக கிராமத்தார், மாகத்தார் எனவும்; ‘வருவார்,
செல்வார், தச்சர், கொல்லர், தட்டார், வண்ணார்’ எனவும்; ‘அம்பர்
கிழான், பேரூர் கிழான், குட்டுவன், பூழியன், வில்லவன், வெற்பன்,
சேர்ப்பன்’ எனவும்; ‘கரியான், கரியாள், செய்யான், செய்யாள்’ எனவும்;
‘தந்தையார், தாயர்’ எனவும்; ‘பெருங்காலர், பெருந்தோளர், அலை
காதர்’ எனவும்; ‘குறவர், இறவுளர், வேட்டுவர்,
ஆயர், பொதுவர்,
நுளையர், திமிலர், பரதவர், களமர், உழவர், எயினர், மறவர்’ எனவும்;
‘பட்டி புத்திரர், கங்கை மாத்திரர்’ எனவும்; ‘ஒருவர், இருவர் முப்பத்து
மூவர்’ எனவும்; ‘அருவாட்

