தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   643


 

சேறும்   என   வரும்.   யானும்  நீயும்  உண்கும்; யானும் அவனும் நீயும்
உண்கும் என எல்லாவற்றோடும் ஒட்டுக.
 

ஈற்றினை  அடுத்து   வருங்கால்  எதிர்வும்  உணர்த்தும்.  இனி,  இவற்றுள்
சிறுபான்மை   நிகழ்காலம்   உணர்த்துவனவும்   உள.   அது,   ‘சிறுகண்
 யானை   யொடு   பெருந்தேர்    எய்தி,   யாமவ   ணின்றும்  வருதும்’
(சிறுபாண்.  142,  3)  என   வரும்.   இனி, ‘உரிஞுதும்,  திருமுதும்’  என
ஏனை எழுத்தின்முன் உகரம் பெற்று வரும். (5)
 

உயர்திணைத் தன்மைஒருமை வினைமுற்று
 

205.

கடதற என்னும்
அந்நாள் கூர்ந்த குன்றிய லுகரமோடு
என்னேன் அல்லென வரூஉம் ஏழுந்
தன்வினை உரைக்குந் தன்மைச் சொல்லே.
 


 

(இ-ள்.) லுகரமோடு -  க,  ட,  த, ற  என்னும்  அந்நான்கு  மெய்யையும் ஊர்ந்து
வந்த   குற்றியலுகரத்தினை   ஈறாக  உடைய  அந்நான்கு சொல்லும், என்
ஏன்,   அல்   என  வரூஉம்   ஏழும்-என்,   ஏன்,  அல் என்று சொல்ல
வருகின்ற   மூன்று   ஈற்றுச்சொல்லுமாகிய   அவ்வேழும்,  தன்   வினை
உரைக்குந்    தன்மைச்    சொல்லே  -   பிறரை   உளப்படுத்தாது  தன்
வினையை உணர்த்துந் தன்மைச் சொல்லாம், எ-று.
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 17:44:58(இந்திய நேரம்)