தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   648


பன, ‘நிலவுக,  பாடுக,  காண்க,’ என்னும் வியங்கோட்கு எதிர்மறை
என்று உணர்க. 

இனி, “நிலவுவார்,  பாடுவார்,  காண்பார்’ என்பன சில வியங்கோள்
முற்று,’  என்று  கூறி,  அவற்றிற்கு  எதிர்மறையாய்  நிலவாதொழிவார்,
பாடாதொழிவார்,    காணாதொழிவார்    என   ஏவற்பொருண்மையை
உணர்த்தி நின்றன என்றலும் ஒன்று. (10) 

உயர்திணைத் தெரிநிலை முற்றின் தொகை

210. பன்மையும் ஒருமையும் பாலறி வந்த
அந்நா லைந்தும் மூன்றுதலை யிட்ட
முன்னுறக் கிளந்த உயர்திணை யவ்வே. 

இது, ‘விரிந்தது  தாகுத்து’த் தெரிநிலை  வினைகள் உயர்திணைக்கு
உரிய என்கின்றது. 

(இ-ள்.) பன்மையும் ஒருமையும் பால் அறிவந்த மூன்று தலையிட்ட
அந்நாலைந்தும்-   பன்மையும்  ஒருமையுமாகிய  பால்  அறிய  வந்த
இருபத்து    மூன்று   ஈற்று   வினைச்சொல்லும்,   முன்னுறக்கிளந்த
உயர்திணைய   -   கிளவியாக்கத்துக்   கூறப்பட்ட   உயர்திணையை
உடையனவாம், எ-று. 

ஈண்டுக் கூறியதனாற் பயன், அன், ஆன் முதலிய இடைச்சொற்பற்றி
உயர்திணைப்படர்க்கை    வினைமுற்று    உணர்த்துதல்;    ஆண்டுக்
கூறியதனாற்  பயன்,  வழுக்காத்தற்கு அவற்றின் ஈறுகளைத்  தொகுத்து
இலக்கண வழக்கு உணர்த்துல் என்றுணர்க. (11) 

உளப்பாட்டுத் தன்மைவினைமுற்றின் திரிபு

211. அவற்றுள்,
பன்மை உரைக்குந் தன்மைக் கிளவி
எண்ணியல் மருங்கின் திரிபவை யுளவே. 

இஃது, உளப்பாட்டுத்தன்மைக்குத் திரிபு கூறுகின்றது. 

(இ-ள்.)  அவற்றுள் பன்மை உரைக்கும் தன்மைக் கிளவி-முற்கூறப்
பட்ட  இருபத்துமூன்று சொற்களுள் பன்மையை உணர்த்துந் தன்மைச்
சொல், எண் இயல் மருங்கின் திரிபவை உள-எண்ணுதல்
  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 17:45:53(இந்திய நேரம்)