Primary tabs

செய்யுளிடத்து, எ-று.
(எ-டு.) ‘வினைவி நிற்றந்தோனே’ (அகம். 48:14) நல்லை மன்னென
நகூஉப்பெயர்ந் தோளே’ (அகம்.248-16) ‘வாடா வள்ளியங் காடிறந்
தோரே’ (குறுந். 216) என வரும்.
வந்தோம், சென்றோம் என்னும் வழக்கு ஏம் ஈற்றின் சிதைவு என
மறுக்க. (14)
ஆய் என்னும் ஈற்று ஆவும் ஓவாதல்
214. ஆயென் கிளவியும் அவற்றொடு கொள்ளும்
இது, விரவுவினையும் அம்முடிபு பெறும் என்கின்றது.
(இ-ள்.)
ஆய் என் கிளவியும் அவற்றொடு கொள்ளும்-முன்னிலை
ஈற்றுள் ஆய் என்னும் ஈறும் மேற்கூறப்பட்டனபோல ஆகாரம்
ஓகாரமாஞ் செய்யுளுள், எ-று.
(எ-டு.) ‘வந்தோய் மன்ற தண்கடற் சேர்ப்ப!’ (அகம். 80:3) என
வரும்.
இவ்விரவுவினை உயர்திணைமேல் வந்தால் ஆ ஓ ஆம் என்றற்கும்,
ஆ ஓ ஆதல் அதிகாரப்படுதலானும் ஈண்டுக் கூறினார். இவை தொழிற்
பெயராயின், பெயரியலுள் அடங்கும். (15)
உயர்திணைக் குறிப்புவினைமுற்று
215.
அதுச்சொல் வேற்றுமை யுடைமை யானும்
கண்ணென் வேற்றுமை நிலத்தி னானும்
ஒப்பி னானும் பண்பி னானுமென்று
அப்பாற் காலங் குறிப்பொடு தோன்றும்.
இது, நிறுத்தமுறையானே உயர்திணை வினைக்குறிப்பு
உணர்த்துகின்றது.
(இ-ள்.) அதுச்சொல் வேற்றுமை உடைமையானும் - ஆறாம்
வேற்றுமையது உடைமைப்பொருட்கண்ணும், கண் என் வேற்றுமை
நிலத்தினானும்-ஏழாம் வேற்றுமையது நிலப்பொருண்மைக்கண்ணும்,
ஒப்பினானும்-உவமத்தின்கண்ணும், பண்பினானும்-பண்பின்கண்ணும்,
என்று அப்பாற்காலம் குறிப்பொடு தோன்றும் - என அப்பொருட்பகுதி
பற்றி வருஞ் சொல்லகத்துக் காலங் குறிப்பான் தோன்றும், எ-று.
‘உடைமை’ என்பது, உடைமைத்தன்மையும் உடை

