Primary tabs

படர்க்கைப் பொருட்கண் ‘இருதிணைச் சொற்கும் ஓரன்ன உரிமைய’
ஆம். இதற்கு உதாரணம் முன்னர்க் காட்டினாம்.
‘நோயும் இன்பமும்’ (2) என்னும் பொருளியற்சூத்திரத்து, ‘சொல்லா
மரபினவற்றொடு செழீஇச், செய்யா மரபிற் றொழிற்படுத்தடக்கியும்’
என்றும், ‘ஞாயிறு திங்கள்’ (201) என்னுஞ் செய்யுளியற் சூத்திரத்து,
‘சொல்லியாங் கமையும் என்மனார்
புலவர்’ என்றும் அஃறிணை
ஏவற்பொருண்மையை முற்றமுடியாமையைக் கூறுகின்ற ஆசிரியர்,
அவற்றிற்கு ஏற்ப ஈண்டும் முன்னிலைக்கண் வரும் அஃறிணை
ஏவற்பொருண்மையை முற்ற முடியாது என்பது
உணர்த்துதற்கு
‘மன்னாதாகும்’ என்றார். எனவே, ‘அஃறிணைக்கண் வரும் முன்னிலை
வியங்கோட்கு ஓரன்ன உரிமை இன்று,’ என்றாராயிற்று. தன்மை
அஃறிணைக்கு இன்மை கூறல்வேண்டா வாயினும், உயர்திணைக்கண்
சிறுபான்மை வழங்குதல்பற்றி உடனோதினார்.
முற்கூறிய நட, வா முதலிய இருபத்துமூன்று ஈற்று முன்னிலை
ஏவலொருமையும் அஃறிணைக்கண் வருங்கால் ஏவல்வினையை
உணர்ந்து அவை முற்ற முடியா என்பதனை உணர்ந்து அதனை
ஏவுதல் மரபன்று என்று கருதி ஆசிரியர் இங்ஙனம் ஓதினார்.
அவைதாம், கூறுகின்றவர் கருத்தான், ஏவல் கண்ணியே வரும்.
உயர்ந்தான் இழிந்தானை இன்னது செய்க, என விதித்தல் ஏவல்
கண்ணியது. இழிந்தான் உயர்ந்தானை ‘இன்னது செய்ய வேண்டும்’ என
வேண்டிக்கோடலும் ஏவல் கண்ணிற்று. இனி, உயர்திணைப்
பொருளாகிய முன்னிலைக்கண் வாழ்க, வாழிய என வாழ்த்துப்
பொருண்மைக்கண் வந்ததும் ஏவல் கண்ணிற்று. ‘கடாவுக பாக! நின்
கால்வல் நெடுந்தேர்’ என வேண்டிக் கோடற் பொருண்மைக்கண்
வந்ததும் ஏவல் கண்ணிற்று. இனி உயர்திணைத் தன்மைக்கண், ‘யானும்
நின்னோ டுடனுறைக.’ என வேண்டிக் கோடற் பொ

