தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   681


 
233.
ன்றின்
சினையொடு முடியா முதலொடு முடியினும்
வினையோ ரனைய என்மனார் புலவர்.
 

இதுவும் அம்மூன்றற்கும் முடிபு வேற்றுமை கூறுகின்றது.
   

அம்முக்கிளவியும்-‘வினைமுதல்  முடிபின’ என்ற அம்மூன்று
சொல்லும்,         சினைவினை        தோன்றின்     சினையொடு
முடியா-சினைப்பொருளிடத்து   வினையெச்சமாய்த்  தோன்றின் தமக்கு
உரிய சினைவினை கொண்டு  முடியா; முதல்வினை கொண்டே முடியும்;
(வினை)  முதலொடு   முடியினும்  -  அவ்வெச்சங்கள் தாம் தத்தமக்கு
உரிய   வினைமுதலான்   அன்றிப்  பிற  வினைமுதலான்  முடியினும்
பிறவாற்றான்  முடியினும்,   ஓரனைய  என்மனார்  புலவர் - தத்தமக்கு
உரிய  வினைமுதல்  கொண்ட தன்மையோடு ஒரு தன்மையை உடைய
என்று கூறுவர் புலவர், எ-று.
 

சினையொடு   முடியா  எனவே,  முதலொடு முடிதல்    பெற்றாம்.
உம்மை எதிர்மறை.
 

(எ-டு.) கண் நொந்து கிடந்தான்; வயிறு நொந்து கிடந்தான் எனவும்,
கண்  வலியூக்   கிடந்தான் எனவும், வயிறு குத்துபு கிடந்தான் எனவும்,
‘கண்துயின்று    முன்றிற்போகா   முதிர்வினள்  யாயும்’  (புறம்.159:4,5)
‘தாளொற்றித்  தப்பி வீழ்ந்தார் தறிவலை மானிற் பட்டார்’ (சீவக. 2768)
எனவுஞ்  சினைப்பொருட்கண்  வந்த  வினையெச்சம்  காரண காரியப்
பொருளவாய்   வினைமுதலொடு  முடிந்தன.  ‘அகனமர்ந்து  செய்யாள்
உறையும்  முகனமர்ந்து,  நல்விருந்  தோம்புவான்  ‘இல்’  (குறள். 84)
‘காமன்  கணையொடு  கண்சிவந்து  புலந்தாள்’ என்பன காரண காரிய
மின்றி அங்ஙனம் வந்தன.
 

இனி,     தலைவன்  பிரிந்து  வருந்தினாள்  எனவும்,  ‘மா  அல்
யானையொடு  மறவர்  மயங்கித்  தூறதர் பட்ட ஆறுமயங் கருஞ்சுரம்’
(கலி. 5:2,3) எனவும், ‘உடம்புயங்கி யானை, க
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 17:52:03(இந்திய நேரம்)