Primary tabs

றவழித் தீவினை வாரா எனவும், நல்வினைதான் உற்ற விடத்த
உதவும்; நல்வினைதான் உற்றவிடத்துத் தீவினை வாரா எனவும் வரும்.
கற்பான் நூல் செய்தான்; செல்வம் தருபாக்கு யாம் விரும்புதும்; நமது
நலன் நுகர்வான் யாம் விரும்புதும் இவை பிற வினை கொண்டன.
இவை வினைமுதல் வினைகொண்டவாறு, முன்னர்க் காட்டினாம். (35)
வினையெச்சங்கள் அடுக்கியவழி முடியுமாறு
பன்முறை யானும் வினையெஞ்சு கிளவி
சொன்முறை முடியா தடுக்குந வரினும்
முன்னது முடிய முடியுமன் பொருளே.
இஃது, அவ்வெச்சங்கள் அடுக்கியவழிப் படுவதொரு முறைமை கூறுகின்றது.
(இ-ள்.) வினையெஞ்சு கிளவி சொன்முறை முடியாது - வினை
யெச்சமாகிய சொற்கள் ஒன்றற்கொன்று முடிக்கும் வினைவந்து
முடியாது, பன்முறையானும் அடுக்குந வரினும்-ஒரு வாய்பாட்டானன்றிப்
பல வாய் பாட்டானும் அடுக்கிவரினும், முன்னது முடிய முடியும் மன்
பொருளே- முன்னின்ற எச்சம் முடிய ஏனையவும் பொருள்
முடிந்தனவாம், எ-று.
(எ-டு.) உண்டு தின்று ஓடிப் பாடி வந்தான்; உண்டு பருகூஉத் தின்குபு வந்தான்; உழுது உண்பானொடு விரைஇ வந்தான் என வரும்.
‘பசந்த மேனியொடு படரட வருந்தி
மருங்கிற் கொண்ட பல்குறு மாக்கள்
பிசைந்துதின வாடிய முலையள் பெரிதழிந்து
குப்பைக் கீரை கொய்கண் அகைத்த
நீருலை யாக ஏற்றி மோரின்
றவிழ்ப்பதம் மறந்து பாசடகு மிசைந்து
மாசொடு குறைந்த உடுக்கையள் அறம்பழியாத்
துவ்வா ளாகிய என்வெய் யோளும்’
எனச் செய்தெனெச்சத்திடையே அவ்வினையெச்சமுற்றும்

