தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   687


 

கொடுத்த     பார்ப்பான்  எனவும், ஆடை ஒலிக்கும் கூலி;    ஆடை
ஒலித்த   கூலி   எனவும்   ஒத்த   உரிமைய  அன்றிச்  சிறுபான்மை
இன்னதற்கு,  இதுபயன்,    என்பனவற்றின்கண்ணும்  வரும்.  இன்னும்,
பழம் உதிரும் கோடு, பழம்  உதிர்ந்த கோடு எனச் சிறுபான்மை தீர்தற்
பொருண்மை   பற்றி  வருதலுங்   கொள்க.  இனி,  செய்த  என்பதன்
குறிப்பாய்,  இன்ன,  அன்ன,   என்ன  எனவும், கரிய, செய்ய எனவும்
வருவனவும்,   கொள்க.   அவை,   ‘இன்ன  தன்மையி  னருமையின்’
(சீவக.2754)  ‘அன்ன தன்மையும்   அறிந்தீயார்’ (புறம்.136: 10) எனவும்,
‘என்ன  கிளவியும்  பண்பின்   தொகையே’  (416) எனவும், கரிய மலர்
நெடுங்கண்  (சிலப்.  7-5) எனவும்  ‘செய்ய கோல்’ (சீவக. 264) எனவும்
வந்தவாறு காண்க. (37)
 

செய்யும் என்பதற்கு ஒரு முடிபு வேற்றுமை
 

237.

அவற்றொடு வருவழிச் செய்யுமென் கிளவி
முதற்கண் வரைந்த மூவீற்றும் உரித்தே.
 

இது, செய்யும் என்பதற்கு ஒரு முடிபு வேற்றுமை கூறுகின்றது.
   

(இ-ள்.) அவற்றொடு வருவழி - அந்நிலம் முதலிய பொருள்களொடு
வருங்கால், செய்யுமென் கிளவி - செய்யும் என்னுஞ் சொல், முதற்கண்
வரைந்த மூவீற்றும் உரித்து - மேல் விலக்கப்பட்ட பல்லோர் படர்க்கை,
முன்னிலை, தன்மை என்னும் மூவகைக்கும் உரித்து, எ-று.
    

அவை ‘எஞ்சிய கிளவி’ என்பதனுள் காட்டினாம்.
    

ஈண்டுக் கூறிய விதி எச்சத்திற்கும்  ஆண்டு விலக்கியது முற்றிற்கும்
என்று உணர்க. அவற்றிற்கு வேறுபாடு கூறுதும்:
   

இருதிணைக்கும   பொதுவாகிய செய்யும் என்னுஞ் சொல், உண்ணும்
என  நின்றுழித்தானே  தன்  தொடர்ப்பொருள்  உணர்த்தல் ஆற்றாது
நின்று,  தன்னை அவன், அது  என்னும் வினைமுதல் வந்து திணையும்
பாலும்   விளக்கத்   தன்  தொடர்ப்  பொருள்  உணர்த்தி,  எடுத்தல்
ஓசையான்   மற்றொரு   சொல்   நோக்காது,  செப்பு  மூயினாற்போல
அமைந்து மாறி நிற்றல்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 17:53:10(இந்திய நேரம்)