தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   706


றி ஒத்ததே!’   (களவழி.36)-இது    மிகுதி   உணர்த்தலின்    சிறப்பு.

‘மாறுகோள்     எச்சமும் வினாவும் ஐயமும்’ (எழுத். 290) என்னுஞ்
சூத்திரத்தான ஐயமுங் கொண்டார். அது, பத்தோ, பதினொன்றோ! என
வரும். (8) 

ஏ என்னும் இடைச்சொல்லின் பொருள்

259. தேற்றம் வினாவே பிரிநிலை எண்ணே
ஈற்றசை இவ்வைந் தேகா ரம்மே. 

இஃது, ஏகாரம் பெரும்பான்மை  பொருள்படுமாறும்,  சிறுபான்மை
அசை நிலை ஆமாறுங் கூறுகின்றது. 

(இ-ள்.) தேற்றம் வினாவே பிரிநிலை எண்ணே ஈற்றசை இவ்வைந்து
ஏகாரமே-தெளிவுப்   பொருண்மை,  வினாப்பொருண்மை,  பிரிநிலைப்
பொருண்மை,  எண்ணுப்பொருண்மை, ஈற்றசையாதல் என இவ்வைந்து
வகைப்படும் ஏகாரம், எ-று. 

(எ-டு.)     உண்டேஎ மறுமை! நீயே உண்டாய்? அவருள் இவனே
கள்வன்.  ‘நிலனே நீரே தீயே வளியே.’ ‘கடல்போல் தோன்றல காடிறந்
தோரே’ (அகம். 1:19) என வரும். 

ஈற்றசை என்றதனைச்  செய்யுள்   ஈற்றின்கண்   அன்றி,   ‘வாடா
வள்ளியங்காடிறந்     தோரே’  (குறுந்.216) எனச் சொல்லின் ஈற்றினுங் கொள்க.  யானே   கொண்டேன்? என்புழி, நீயே கொண்டாய் என்னும் எதிர்மறைப்    பொருள்  தருதல்,  ‘மாறுகோள்  எச்சமும்  வினாவும்’ (எழுத்.  290) என்பதனாற் கொள்க.(9) 

என என்னும் இடைச்சொல்லின் பொருள்

260. வினையே குறிப்பே யிசையே பண்பே
எண்ணே பெயரோ டவ்வறு கிளவியும்
கண்ணிய நிலைத்தே எனவென் கிளவி. 

இது பொருள்படுமாறு கூறுகின்றது. 

(இ-ள்.) வினையே குறிப்பே இசையே பண்பே எண்ணே பெயரோடு
அவ்வறு  கிளவியும்  கண்ணிய நிலைத்தே என என் கிளவி - வினைச்
சொல்லின்    பொருண்மையும்,   குறிப்பாய்   வரும்  உரிச்சொல்லின்
பொருண்மையும்,   இசைக்கண் வரும் உரிச்சொல்லின் பொருண்மையும்,
பண்பின்  கண்  வரும்  உரிச்சொல்லின்  பொருண்மையும்,  எண்ணுப்
பொருண்மையும்,   பெயர்ப்   பொருண்மையோடே   கூடி  அவ்வாறு
பொருண்மையுந்
  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 17:56:42(இந்திய நேரம்)