தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   734


யைச்  செற்ற  தீங்குத்  தீர்த்துநீர்  கொண்மின்’  (சீவக. 1275) என
வரும்.
 

இதனானே,  விடல்  என்னும்  உரிச்சொல்   அடியாகப்  பிறக்கும
பெயரும்  வினையுந்  தன்வினையும்  பிறவினையும்  பற்றிப்  பிறக்கும்
என்பது  உணர்த்தற்கு  விடற்பொருட்டு  என்றார்.  இயைபு என்பதற்கு
இயைப்பு  என  வழங்காது,  இயைக்க,  இயைவிக்க   என  வேறுபாடு
வழங்குதலின், தன்வினை பிறவினையுடன் ஓதாராயினார்.
 

ஒன்றென  முடித்தலாற்  பிளத்தல்,   அணங்கல்   என்றாற்போலத்
தன்வினை   பிறவினைக்குப்   பொதுவாய்   வருவனவுங்    கொள்க.
இப்பிறவினை,  தீர்வித்தல்  தீர்ப்பித்தல்  என  வாய்பாடு  வேறுபட்டு
இக்காலத்து வழங்குமாறும் உணர்க. (20)
 

கெடவரல், பண்ணை என்பவற்றின் பொருள்

319. கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு. 

இதுவும் அது. 

(இ-ள்.) கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு-கெடவரல்,
பண்ணை   என்னும்    அவ்விரண்டும்   விளையாட்டாகிய   குறிப்பு
உணர்த்தும், எ-று.
 

(எ-டு.)   ‘கெடவரல்   ஆயமொடு.’   ‘பண்ணைத்     தோன்றிய
எண்ணான்கு  பொருளும்’ (மெய்ப்.1) என வரும். விளையாட்டு என்றது,
விளையாட்டுக் கருத்தினை. (21)
 

தட, கய, நளி என்பவற்றின் பொருள்

320. தடவும் கயவும் நளியும் பெருமை 

இது பண்பு. 

(இ-ள்.) தடவும் கயவும் நளியும் பெருமை - தடவும் கயவும் நளியும்
பெருமையாகிய பண்பு உணர்த்தும், எ-று.
 

(எ-டு.) ‘வலிதுஞ்சு  தடக்கை  வாய்வாட்  குட்டுவன்’  (புறம்.394:3)
‘இரும்பிடி கன்றொடு விரைஇய * கயவாய்ப், பெருங்கை யானை’ (அகம்.
118:7,8)  ‘நளிமலை  நாடன்  நள்ளியவன்  எனவே’ (புறம். 150:28) என
வரும். ‘கயவர்’ (குறள்.1076) என்பது வழக்கு. (22)
 

* (பாடம்) விரைஇக். 

தட என்பது வளைவையும் உணர்த்தல்

321. அவற்றுள்,
தடவென் கிளவி கோட்டமுஞ்செய்யும்.
 

இஃது எய்தியதன் மேல் சிறப்பு விதி. 

(இ-ள்.) அவற்றுள் தட என் கிளவி கோட்டமும் செய்யும்-முற்கூறிய
மூன்றனுள்    தட    என்னுஞ்    சொல்    கோட்டம்     என்னும்
பண்பினையும்த்தும்,  எ-று.
 

(எ-டு.) ‘தடமருப் பெருமை’ (நற்.120) என வரும். (23) 

கய என்பது மென்மையையும் உணர்த்தல்

322. கயவென் கிளவி மென்மையுஞ் செய்யும். 

இதுவும் அது. 

(இ-ள்.) கய என் கிளவி மென்மையும் செய்யும்-கய என்னுஞ் சொல்
மென்மை
  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 18:01:57(இந்திய நேரம்)