தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   795


ல் வேண்டிக்கோடற் பொருண்மைக்கண் வருமென்று உணர்க. 

உண்,  தின்   என்பன  முதலிய  முன்னிலை  ஏவல்,  உயர்ந்தான்
இழிந்தானை ஏவுதற்கண் வரும். 

‘அறியாய் வாழி தோழி!
........................................
பொருளே காதலர் காதல்
அருளே காதலர் என்றி நீயே.’

(அகம்.53:1,15,16)

என்னும் அகப்பாட்டினுள்  அறியாய் என்றது, காதலர் அருளே காதலித்
திருப்பார்’ என்றுநீ  கூறுகின்றமையாற் காதலர் கருத்தினை நீ அறியாய்,
என முன்னிலை மறையாய் நின்றவாறும்,
 

‘அறியாய் வாழி தோழி! பொறிவரிப்
பூநுதல் யானையொடு’

(அகம்.268:1,2)

என்னும் அகப்பாட்டினுள் அறியாய் என்றது, 

‘காமங் கலந்த காதல் உண்டெனின்
நன்றுமன் அதுநீ நாடாய் கூறுதி’
 

என்றதனோடு இயையுங்கால், ‘அவனொடு கூட்டம் உண்டு எனின், அது
மிக  நன்று!  அதனை  நீ  ஆராயாமல்  கூறுகின்றாய்;  அதனை நின்
மனத்தான்  ஆராய்ந்து  பாராய்,’  என  வேண்டிகாடற்பொருள்  தந்து
முன்னிலை  ஏவல்   உடம்பாடாய்  நின்றவாறும்  உணர்க.  இங்ஙனம்
மறைச்சொல்   உடம்பாட்டுப்    பொருளைப்    படுத்தல்  ஓசையாய்
உணர்த்திநிற்றல்   சான்றோர்    செய்யுளுள்   பெரும்பான்மையென்று
உணர்க. 

இனி,  வழக்கினுள்ளும்,  ‘இந்நாள்  எம்  இல்லத்து உண்ணாய் இப்
பொழுது சொல்லாய்’  என்றாற்போலப் பெரும்பான்மையும் வழங்குமாறு
உணர்க. 

‘உண்பாய்’ என்னுஞ் சொல், ஓசை வேற்றுமையான் முற்றும் தொழிற்
பெயரும்  வினையெச்சமும்  வியங்கோளுமாய்  நின்றாற்போலவும், தபு
என்பது, ஓசை  வேற்றுமையான்  ‘ஒன்றனைக் கொல்,’ என்றும், ‘நீ சா,’
என்றும்   நின்றாற்போலவும்,   மறைச்சொல்   ஓசை  வேற்றுமையான்
உடம்பாடு உணர்த்திற்று என்று உணர்க. ‘அங்ஙனம் உணர்த்திற்றேனும்,
மறை உணர்த்தும் ஆகாரம் உடம்பாடு உணர்த்துமோ’ எனின், அத
  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 18:13:27(இந்திய நேரம்)